புதிய சிறுகோள் ஒன்று சுமார் 4500மீட்டர் விட்டம் கொண்ட அந்த சிறுகோள் 94,000 கிலோ மீட்டர் வேகத்தில் இன்று இரவு பூமியை கடக்கும் என்று நாசா அறிவித்துள்ளது.
அமெரிக்க விண்வெளி நிறுவனம் இதை நினைவில் வைத்துக் கொண்டு 2016 ஆம் ஆண்டிலேயே இந்த 2016 AJ193 என்ற சிறுகோளை அபாயகரமான ஒன்று என்று பட்டியலிட்டுள்ளது.
சந்திரனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரத்தின் 9 மடங்கு தூரத்தில் தான் அந்த சிறு கோள் பூமியை கடக்க உள்ளதாக தெரிகிறது. மேலும் இது பூமியின் சுற்றுவட்டப் பாதையில் கடந்து போவதை டெலஸ்கோப் வழியாக காணலாம் என்று நாசா தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி ஒரு மணி நேரத்திற்கு 94,208 கிலோமீட்டர் தூரத்தை கடக்கும் என்று சொல்லப்படுகிறது.
ஆர்வமுள்ள வானியலாளர்கள் 1.4 கிலோமீட்டர் அகலமுள்ள சிறுகோளை தொலைநோக்கி வழியாக பூமியின் சுற்றுவட்டப்பாதையில் கடப்பதை காணலாம் என்று நாசா தெரிவித்துள்ளது.
2016 AJ193 என்ற சிறுகோள் ‘அபாயகரமானதாக’ பட்டியலிடப்பட்டுள்ள NASA, இந்த சிறுகோள் அடுத்த முறை 2063 இல் பூமிக்கு அருகில் வரும் என்றும் கூறியுள்ளது.
ஹவாய் ஹலேகாலா ஆய்வகத்தில் அமைந்துள்ள பனோரமிக் சர்வே டெலஸ்கோப் மற்றும் ரேபிட் ரெஸ்பான்ஸ் சிஸ்டம் வசதியால் ஜனவரி 2016 இல் இந்த சிறுகோள் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிறுகோள் மிகவும் இருண்டது மற்றும் பிரதிபலிக்காது என வானியலாளர்கள் கூறியுள்ளனர். அதன் சுழற்சி காலம், துருவ திசை மற்றும் நிறமாலை வகுப்பு உட்பட பல விஷயங்கள் இப்போது வானநிலை படி மறைக்கப்பட்டுள்ளன.
இந்த சிறுகோள் ஒவ்வொரு 5.9 வருடங்களுக்கு ஒரு முறை சூரியனைச் சுற்றி வருகிறது. பூமி கிரகத்தை நெருங்கி பயணிக்கிறது, அது பின்னர் வியாழன் கோளின் சுற்றுப்பாதைக்கு அப்பால் பயணிக்கிறது.
ஆகஸ்ட் 21 அதாவது இன்று மிக முக்கியமானது, ஏனெனில் சிறுகோள் பூமிக்கு மிக அருகில் நெருங்குவது இதுவே முதல் முறையாகும், குறைந்தபட்சம் அடுத்த 65 ஆண்டுகளுக்கு, அதன் பயணம் கணக்கிடப்பட்ட மிக நீண்ட பயணமாக உள்ளது.