இன்று இந்த ராசிக்காரர்களுக்கு வெற்றி மேல் வெற்றி தான்!

0
115

மேஷம்

இன்று உங்களுக்கு யோகமான நாள். யோசிக்காமல் செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும் இல்லத்திற்கு தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்கும் எண்ணம் உண்டாகும் உத்தியோக முயற்சி கைகூடும்.

ரிஷபம்

சவால்களை எதிர்கொள்ளும் நாள். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும் மருத்துவ செலவுகள் குறைந்து மனநிம்மதி ஏற்படும் தைரியமும், தன்னம்பிக்கையும், அதிகரிக்கும்.

மிதுனம்

கையில் எடுத்த காரியங்களில் உடனடி வெற்றி கிடைக்கும் நாள். தொழில் தொடர்பான விதத்தில் லாபம் கிடைக்கும் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்ச்சியடைவீர்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

கடகம்

அருகாமையில் இருப்பவர்களை அனுசரித்துச் சென்றால் நன்று, அதிக செலவுகள் ஏற்படுகிறதே என்று காலை கொள்வீர்கள் விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாள்வது மிகவும் நல்லது.

சிம்மம்

நினைத்தது உடனடியாக நிறைவேறும் நாள். நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும் மற்றவர் நலன் கருதி எடுத்த முயற்சி ஆதாயம் தரும். தந்தை வழி உறவில் உண்டான மனகசப்பு அகலும்.

கன்னி

இன்று உங்களுக்கு இனிமையான நாள், தொழில் தொடர்பாக புதிய அனுபவங்கள் ஏற்படும், மாமன், மைத்துனர், வழியில் மகிழ்ச்சிக்குரிய தகவல் வந்து சேரும் நண்பர்கள் சரியான சமயத்தில் கைகொடுத்து உதவ முன்வருவார்கள்.

துலாம்

இன்று நீங்கள் கவனமுடன் செயல்பட்டால் எளிமையாக வெற்றி பெறலாம். வரவை விட செலவு அதிகமாகும் இடமாற்றம் செய்வது தொடர்பாக சிந்தனை மேலோங்கும் வாகன பழுது உண்டாவதற்கான வாய்ப்புண்டு.

விருச்சிகம்

இன்று உங்களுடைய முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். உத்தியோக உயர்வு ரீதியாக எடுத்த முயற்சிகள் பலிதமாகும் அதற்கான அறிகுறிகள் தோன்றும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் ஏற்படும் குழந்தைகளின் முன்னேற்றம் தொடர்பாக எடுத்த முயற்சி வெற்றி தரும்.

தனுசு

இன்று நீங்கள் முக்கிய நபர்களை சந்தித்து முடிவெடுக்க வேண்டிய நாள். மாற்று கருத்துடையோர் கூட மனம் மாற வாய்ப்புண்டு வருமானம் போதுமானதாக இருக்கும் உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

மகரம்

வெற்றிக்கான செய்திகள் வீடு வந்து சேரும் நாள். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள், கூட்டு தொழிலில் லாபம் கிடைக்கும் தொலைபேசி வழித் தகவல் ஆதாயம் கொடுப்பதாக அமையும்.

கும்பம்

கொடுத்த வாக்கை காப்பாற்றி காட்டுவீர்கள். பொருளாதார முன்னேற்றம் தொடர்பாக புதிய திட்டங்களை வகுப்பீர்கள் பிறருக்காக பொறுப்பை ஏற்றுக்கொண்டு வாங்கிக்கொடுத்த தொகை வந்து சேர்வதற்கான வாய்ப்புண்டு.

மீனம்

இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாள், ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவைப்படுகிறது. குடும்ப ரகசியங்களை வெளியே சொல்லாமல் இருப்பது நன்று. முன்னேற்றத்திற்கு மாற்று இனத்தவர்களின் உதவி கிட்டும்.