மேஷம்
இன்று தாங்கள் விலையுயர்ந்த பொருட்களை வாங்கிய மகிழ்ச்சியடைவீர்கள, வீடு வாங்கும் முயற்சியில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகமாற்றம் தொடர்பான சிந்தனை தோன்றும், ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நன்று.
ரிஷபம்
இன்று தாங்கள் வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள், தொழில் ரீதியாக சில மறைமுக போட்டிகள் உண்டாக்கலாம், திடீர் செலவுகள் ஏற்படும், அலைச்சலுக்கேற்ற ஆதாயமிருக்காது.
மிதுனம்
இன்று தாங்கள் ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமைத்துக் கொள்ளும் நாள், திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடி நடந்தேறும். தொழில் தொடர்பாக எடுத்த முயற்சிக்கு பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
கடகம்
இன்று தாங்கள் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டிய நாள், தங்களை உதாசீனப்படுத்தியவர்கள் உதவி கேட்டு வருவார்கள், பழைய பிரச்சினைகளை தீர்த்து வைக்க முழுமூச்சுடன் செயல்படுவீர்கள், உடல்நலம் சீராகும்.
சிம்மம்
இன்று தங்களுக்கு லாபகரமான நாள், நல்லவர்களின் தொடர்பு காரணமாக, நலம் காண்பீர்கள் கடல் பயண வாய்ப்புகள் கூடுவதற்கான அறிகுறிகள் தோன்றும், ஆதாயம் கொடுக்கும் காரியமொன்றில் அதீத ஈடுபாடு செலுத்துவீர்கள்.
கன்னி
இன்று தங்களை விட்டு விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணையும் நாள், புதிய வாய்ப்புகள் கதவை தட்டும். சரியான நபர்களின் ஆலோசனைகளை கேட்பதில் தவறில்லை என நினைப்பீர்கள், திருமண கனவுகள் நனவாகும்.
துலாம்
இன்று தங்களுடைய அந்தஸ்து அதிகரிக்கும் நாள், மற்றவர்களுக்காக எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். நீண்ட காலமாக இருந்த நோயிலிருந்து நிவாரணம் காண்பீர்கள், பழைய கடன்களை அடைக்க புதிய யுக்திகளை கையாளுவீர்கள்.
விருச்சிகம்
இன்று தங்களுக்கு நன்மைகள் யாவும் நடைபெறும் நாள், நாட்டை ஆளும் நபர்களின் நட்பு கிடைக்கும். வாரிசுகளின் நலனில் அக்கறை செலுத்துவீர்கள், தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்திணையலாம், நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்ப்பார்கள்.
தனுசு
இன்று தங்களுக்கு வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள், பழைய வாகனத்தை மாற்றம் செய்யும் எண்ணம் அதிகரிக்கும். பெற்றோர்கள் வழியில் பிரியம் அதிகமாகலாம், வீட்டில் சுகாரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றலாம்.
மகரம்
இன்று தங்களுக்கு மறக்க இயலாத சம்பவங்கள் நடைபெறும் நாள், மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும், அதிகரிக்கும் அடிப்படை வசதிகளை அதிகரித்துக் கொள்வீர்கள், வெகு நாட்களுக்குப் பிறகு நண்பர்கள் பணத்தேவைகளை பூர்த்தி செய்வார்கள்.
கும்பம்
இன்று தங்களுக்கு பண வரவு தாராளமாக இருக்கும் நாள், தடைகள் நீங்கும் கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்ச்சியடைவீர்கள். பொது வாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரலாம், விலகிச்சென்ற திருமண பேச்சுக்கள் நல்லதொரு முடிவிற்கு வரும்.
மீனம்
இன்று தங்களுக்கு பாராட்டும், புகழும், அதிகரிக்கும் நாள். பக்குவமாக பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். தொழில் முன்னேற்றம் உள்ளிட்டவற்றை மனதில் வைத்து பயணமொன்றை மேற்கொள்வீர்கள். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவைப்படுகிறது.