Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பணமழை தான் போங்க!

மேஷம்

இன்று தங்களுக்கு ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள், வரவு திருப்திகரமாக இருக்கும், எதிர்பார்த்த உதவிகள் மிக எளிதாக கிடைக்கும், உத்தியோகத்தில் விரும்பிய இடத்திற்கு மாறுதல் கிடைக்கும்.

ரிஷபம்

இன்று தங்களுக்கு தடைகள் யாவும் விலகும் நாள், தாராளமாக செலவு செய்து மகிழ்ச்சியடைவீர்கள், உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும், வளர்ச்சிக்கு ஆரம்ப புள்ளியாக இருந்தவர்களை சந்தித்து மகிழ்ச்சியடைவீர்கள்.

மிதுனம்

இன்று தங்களுக்கு அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள், உடல் நலனில் அக்கறை கட்டுவது மிகவும் நன்று. குடும்பத்தைச் சார்ந்தவர்கள் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்ச்சியடைவீர்கள், இடம் வாங்குவதிலிருந்த தடை நீங்கும்.

கடகம்

இன்று தங்களுடைய விருப்பங்கள் யாவும் நிறைவேறும் நாள், குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பது மிகவும் நன்று. பிரபலமானவர்களின் சந்திப்பு காரணமாக, பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள்.

சிம்மம்

இன்று தாங்கள் கையாளும் பொருட்களில் கவனம் தேவைப்படுகிறது, குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்ல வேண்டாம், செலவுகள் உண்டாகும், உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடலாம்.

கன்னி

இன்று தங்களுக்கு தடைப்பட்ட காரியங்கள் யாவும் தானாக நடைபெறும் நாள், வியாபார முன்னேற்றம் காரணமாக, வெளியூர் பயணமொன்றை மேற்கொள்ள நேரலாம். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

துலாம்

என்று தங்களுக்கு தொழில் தொடங்கும் முயற்சிகள் கைகூடும் நாள், பண தேவைகள் பூர்த்தியாகும், பக்குவமாக பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள், விட்டுப்போன வரன் மறுபடியும் வந்து சேரலாம்.

விருச்சிகம்

இன்று தங்கள் கையிலெடுத்த காரியங்களில் வெற்றி நிச்சயம், தன்னம்பிக்கையும், தைரியமும், அதிகரிக்கும்.பணவிவகாரங்களில் நாணயத்தை காப்பாற்றுவீர்கள், குடும்பத்தில் குதூகலம் கொடுக்கும் சம்பவமொன்று நடைபெறும்.

தனுசு

இன்று தங்களுக்கு தேவைக்கேற்ற பணம் வீடு தேடி வரும் நாள், இல்லத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றலாம். தாங்கள் எதிர்பார்த்தப்படியே உத்யோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

மகரம்

இன்று தங்களுக்கு வருமானம் திருப்திகரமாக இருக்கும் நாள், தொழிலில் இருந்த மறைமுக போட்டிகளை முறியடிப்பீர்கள். மாற்று மருத்துவம் காரணமாக, உடல் நலம் சீராகும், உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் உண்டான பிரச்சனை நீங்கும்.

கும்பம்

இன்று தங்களுக்கு நன்மைகள் யாவும் நடைபெறும் நாள், கூட்டுத் தொழிலில் மாற்றம் உண்டாகும். இடம், பூமி, வாங்க வகுத்தத் திட்டம் நிறைவேறும், வருமானம் திருப்திகரமாக இருக்கும், உத்தியோகத்தில் தற்காலிக பணி நிரந்தர பணியாக மாறலாம்.

மீனம்

இன்று தங்களுக்கு வரவு அதிகரிக்கும் நாள் பழைய வாகனத்தை கொடுத்துவிட்டு புதிய வாகனம் வாங்கும் எண்ணம் தோன்றலாம். உத்தியோகத்தில் ஊதிய உயர்வின் காரணமாக, குடும்பத்தை பிரிந்து பணியாற்றும் சூழல் ஏற்படலாம்.

Exit mobile version