Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் அதிகரிக்கும்!

மேஷம்

இன்று தங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். அலுவலகத்தில் உங்களுடைய திறமைகளை கண்டு உயரதிகாரிகள் பாராட்டுவார்கள். கணவன், மனைவி உறவுகளுக்குள் சில மனக்குழப்பங்கள் உண்டாகி நீங்கும். பண வரவு தேவைக்கேற்றவாறு இருக்கும்.

ரிஷபம்

இன்று தங்களுடைய வளர்ச்சிக்கு நல்லவிதமான வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் உத்தியோகத்தில் பணிமாற்றம் அல்லது இடமாற்றத்திற்கான வாய்ப்பு ஏற்படும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பண வரவு அதிகரிக்கும்.

மிதுனம்

இன்று தங்களுடைய அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் சற்று கடினம் தென்படும். தொழில் உத்தியோகம் உள்ளிட்டவற்றைப் பொறுத்தவரையில் தங்களுடைய பணிகளை செய்வதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வீர்கள். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்காது. பண வரவு அதிகரிக்கும். அதற்கேற்ற செலவுகளும் இருக்கும்.

கடகம்

இன்று தங்களுடைய முயற்சிகளில் பொறுமையுடனும் உறுதியுடனும் இருக்க வேண்டிய நாள் தொழில் மற்றும் உத்தியோகத்தில் சில சவால்களை சந்திக்க நேரலாம். வேலைப்பளு அதிகரிக்கும் அதனை சாமர்த்தியமாக திட்டமிட்டு முடிவுக்கு கொண்டு வருவீர்கள். கணவன், மனைவிக்குள் சில பிரச்சனைகள் உண்டாகி நீங்கும். பண வரவு என்பது கடினமாகவே காணப்படும்.

சிம்மம்

இன்று தங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். தொழில் மற்றும் உத்தியோகத்தை பொருத்தவரையில் மேலதிகாரிகளின் பாராட்டுக்களும், ஆதரவும் கிடைக்கும். கணவன், மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும்.

கன்னி

இன்று தங்களுக்கு சிறந்த நாளாக இருக்காது. அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்காது. கணவன், மனைவிக்குள் சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். பண வரவு சற்று கடினமாக இருக்கும்.

துலாம்

இன்று தாங்கள் இலக்குகளை சரியாக திட்டமிட வேண்டும். தொழில் உத்தியோகத்தை பொறுத்தவரையில் தங்களுடைய மேலதிகாரிகளுடன் சில விரும்பத்தகாத சூழ்நிலைகள் உண்டாகும். கணவன் மனைவி உறவுக்குள் கடுமையாக நடந்து கொள்வதை தவிர்க்கவும். உங்களுடைய நிதி நிலையை பொறுத்தவரையில் சற்றே வறட்சியுடன் தான் காணப்படும். நீங்கள் கையிலிருக்கும் பணத்தை சேமிக்க வேண்டும்.

விருச்சிகம்

இன்றைய தினம் தங்களுக்கு சிறப்பான நாளாக இருக்காது. தொழில் உத்தியோகத்தை பொருத்தவரையில் வளர்ச்சி குறைந்து காணப்படும். அதிக பணிகள் காரணமாக இன்று நீங்கள் சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். கணவன், மனைவிக்குள் தொடர்பு கொள்வதில் சில சிக்கல்கள் இருக்கும். ஆகவே உங்களுடைய மனநிலை பாதிக்கப்படும்.

தனுசு

இன்று தங்களுக்கு புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நாளாக இருக்கும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் பணியிட சூழல் சாதகமாக இருக்கும். கணவன், மனைவி உறவுக்குள் இன்றைய நாள் நல்ல புரிதல் காணப்படும். கணவரவு தாராளமாக இருக்கும். குடும்ப நலனுக்காக பணத்தை செலவு செய்ய நேரலாம்.

மகரம்

இன்று தங்களுக்கு புதுப்புது வாய்ப்பு கிடைக்கும் நாளாக இருக்கும். உங்களுடைய திறமைகளை உத்தியோகத்தில் வெளிப்படுத்துவீர்கள். கணவன், மனைவி உறவுக்குள் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து செல்வீர்கள். நிதிநிலை சிறப்பாக இருக்கும்.

கும்பம்

இன்று தங்களுக்கு அன்றாட பணிகளை செய்யும்போது சற்றே கவனம் தேவை. தொழில்நுட்பத்தில் அதிக பளிச்சவாயை காரணமாக உங்களுடைய பணியில் தடைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புண்டு. கணவன், மனைவிக்குள் சில பிரச்சனைகள் உண்டாகி நீங்கும். வீண் செலவுகள் ஏற்படலாம்.

மீனம்

இன்று தாங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு தங்களுக்கு நல்ல பலன் கிடைக்காது. பணியிடத்தில் தடைகள் காரணமாக உங்களுடைய வளர்ச்சி பாதிக்கப்படும். கணவன், மனைவிக்குள் சிறு பிரச்சனைகள் வந்து நீங்கும். பணவரவு திருப்திகரமாக இருக்காது. செலவுகள் அதிகரித்து காணப்படும்.

Exit mobile version