Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும்!

மேஷம்

இன்றைய தங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். அலுவலகத்தில் தங்களுடைய பணிகளை சிறப்பாக செய்து தங்களுடைய திறமைகளை வழிகாட்டுவீர்கள். ஆகவே மகிழ்ச்சியாக இருப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே சந்தோஷம் அதிகரிக்கும். நிதிநிலை சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்

இன்று தங்களுக்கு சற்றே சீரான நாளாக இருக்கும். தங்களுடைய பணிகளை செய்யும் போது கவனமாக திட்டமிட்டு செயல்படுவது அவசியம். வாழ்க்கை துணையிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பணவரவு சற்றே குறைவாக காணப்படும். ஆகவே பயணம் செய்யும்போது பண விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.

மிதுனம்

இன்று தாங்கள் பொறுமையுடன் இருப்பது அவசியம். ஆனால் முக்கிய முடிவுகளை மேற்கொள்வதற்கு சரியான நாளாக இருக்கும். நீங்கள் கடினமாக உழைத்தாலும் அதற்கான பலன் கிடைக்காது. ஆகவே கவலைப்படாமல் செயல்பட வேண்டும். மனைவியிடம் அனுசரித்து செல்வது குடும்பத்திற்கு நல்லது. பணவரவு நடுநிலையுடன் இருந்தாலும் வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும்.

கடகம்

இன்று தங்களுக்கு வெற்றிகரமாக நாளாக இருக்கும். சரியான நேரத்தில் தங்களுடைய பணிகளை செய்து முடிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரித்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நிதிநிலை சிறப்பாக இருக்கும்.

சிம்மம்

இன்று தங்களுக்கு மன உளைச்சல் சற்று அதிகரிக்கலாம். ஆகவே ஆன்மீக வழிபாடு மனதிற்கு நிம்மதியை கொடுக்கும். தங்களுடைய பணிகள் வழக்கம் போல அல்லாமல் அதிகமாக இருப்பதால் கவனமாக செயல்பட வேண்டும். மனைவியிடம் பேசும் போது வார்த்தைகளை விடாமல் அனுசரித்து செல்வது நல்லது. நிதிநிலை சீராக இருப்பதால் தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.

கன்னி

இன்று தங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகள் மேற்கொள்வதற்கு உகந்த நாளாக இருக்கிறது. அலுவலகத்தில் தங்களுடைய பணிகளை சிறப்பாக செய்து முடித்து மேல் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமையை அதிகரிக்கும். நிதிநிலை சிறப்பாக காணப்படும்.

துலாம்

இன்று தாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு நற்பலன்கள் இருக்காது. அலுவலகத்தில் தங்களுடைய பணிகள் அதிகரிப்பதால் அதனை கடினமாக நினைக்காமல் திட்டமிட்டு செயல்பட வேண்டும். அதன் மூலமாக வெற்றி பெற வாய்ப்புள்ளது. மனைவியிடம் வீண் விவாதங்களை தவிர்த்து அனுசரித்து செல்வது நல்லது. பணவரவு நடுநிலையுடன் இருக்கும். செலவு சற்றே அதிகரிக்க கூடிய நாளாக உள்ளது.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு சவாலான நாளாக இருக்கும். அலுவலகத்தில் பணிகளை கவனமாக செய்து முடிக்க வேண்டும். பணி தொடர்பாக பயணம் செய்வதற்கான வாய்ப்புகள் உண்டு. மனைவிடம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். நிதிநிலை சிறப்பாக இருக்காது. செலவு, வரவு இரண்டும் கலந்து காணப்படும்.

தனுசு

இன்று தங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. எல்லோரிடமும் பொறுமையாக செயல்பட வேண்டும். அலுவலகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்காத காரணத்தால் திட்டமிட்டு செயல்பட வேண்டி வரும். ஆகவே கவனமாக இருப்பது அவசியம். நிதிநிலை சற்றே சீரானதாக இருக்கும்.

மகரம்

இன்று தங்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். தாங்கள் சரியான நேரத்தில் பணிகளை செய்து முடித்து வெற்றியடைவீர்கள். அது மகிழ்ச்சி தரக்கூடிய தருணமாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும் பண வரவு சிறப்பாக இருக்கும்.

கும்பம்

இன்று தங்களுக்கு சற்றே சீரான நாளாக இருக்கும். ஆகவே அமைதியாக செயல்படுவது நல்லது. பணிகள் அதிகரிப்பதால் ஓய்வின்றி வேலை செய்யும் சூழ்நிலை உண்டாகும். ஆகவே கவனமாக இருக்க வேண்டும். மனைவியிடம் விட்டுக் கொடுத்து செல்வது அவசியம். நிதிநிலை குறைவாக காணப்படுவதால் பணம் தொடர்பான விவகாரத்தில் கவனமாக நடந்து கொள்வது அவசியம்.

மீனம்

இன்று தங்களுக்கு சவாலான நாளாக இருக்கும். அலுவலகத்தில் பணிகளை மேற்கொள்ளும் போது திட்டமிட்டு செயல்படுவது அவசியம். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நல்லது. பணவரவு நடுநிலையுடன் காணப்படும்.

Exit mobile version