Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நீங்க இந்த ராசியா? இன்று கவனமுடன் இருங்கள்!

மேஷம்

இன்று உங்களுக்கு நன்மைகள் நடைபெற நந்தியை வழிபட வேண்டிய நாள். அருகாமையிலிருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும் நின்றுபோன கட்டிட பணியை மறுபடியும் தொடங்குவீர்கள், உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு இருந்த நெருக்கடி அகலும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு மிகவும் யோகமான நாள். பணவரவு தாராளமாக இருக்கும், சான்றோர்களின் சந்திப்பால் சந்தோஷம் உண்டாகும். தொலைதூரத்திலிருந்து வரும் தகவல்களால் உறவுகள் பலப்படும் உத்தியோகமாற்றம் தொடர்பாக சந்திப்பீர்கள்.

மிதுனம்

போட்டிகளில் வெற்றி கிடைக்கும் நாள். நண்பர்களின் சந்திப்பு காரணமாக, நன்மைகள் ஏற்படும் நேற்றைய சேமிப்பு இன்றைய செலவுக்கு கைகொடுக்கும் உத்யோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம்.

கடகம்

இன்று உங்களுக்கு உற்சாகம் அதிகரிக்கும். மகிழ்ச்சிகள் அதிகமாகும் பணத்தேவைகள் எளிதாக பூர்த்தியாகும், உத்யோகத்தில் உங்களுடைய பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட வேலைகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்.

சிம்மம்

இன்று உங்களுக்குப் புதிய வாய்ப்புகள் தேடிவரும் நாள். நண்பர்கள் மூலமாக நல்லதொரு தகவல் கிடைக்கும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்று. அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ள நினைப்பீர்கள்.

கன்னி

இன்று தாங்கள் நன்றாக யோசித்து செயல்பட வேண்டிய நாள். உத்தியோகத்தில் இடமாற்றம் தொடர்பாக எண்ணங்கள் தோன்றலாம், சில நண்பர்கள் உங்களிடம் உதவி கேட்டு நச்சரிக்கும் பயணங்களின் போது கவனம் தேவை.

துலாம்

விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். வீடு மாற்றம் தொடர்பாக சிந்தனை தோன்றும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சம்பள உயர்வு கிடைக்கும் பல வழிகளிலும் பணம் வந்து சேரும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு பாராட்டும், புகழும், அதிகரிக்கும் நாள். வெற்றிச் செய்திகள் வீடு தேடி வரும் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து எதிர்பார்த்த தொகை கிடைக்கும் விஐபிக்களின் உதவி கிடைக்கும்.

தனுசு

இன்று தங்கள் ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு செயல்பட வேண்டிய நாள் உடல்நலத்தில் உபாதைகள் உண்டாகி பின் விலகும் உதவி செய்த சிலரே தங்களை உதாசீனப்படுத்தலாம். குடும்பத்தில் குழப்பங்கள் அதிகமாகலாம் விரயங்கள் ஏற்படும்.

மகரம்

இன்று உங்களுக்கு சந்திக்கும் நண்பர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். அண்டை வீட்டாரின் பகை மாறுவதற்கான சூழ்நிலை ஏற்படும் நண்பர்களின் உதவிகளை பெற்று மகிழ்ச்சியடைவீர்கள் கடன் சுமை குறைய புதிய யுக்திகளை கையாளுவீர்கள்.

கும்பம்

பணப்பற்றாக்குறை அறவே நீங்கும் நாள். பாசம், நேசம் கிடைக்கும் பூர்வீக சொத்துக்களில் உண்டான வில்லங்கங்கள் மறையும் மாமன், மைத்துனர், வழியில் உதவிகள் கிடைக்கும் உடல் நலம் சீராகி உற்சாகம் ஏற்படும்.

மீனம்

அருகில் இருப்பவர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்வது நல்லது. தொழிலில் லாபம் அதிகரிக்க அனுபவமிக்கவர்களின் ஆலோசனை பெறுவீர்கள் திருமணப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும்.

Exit mobile version