Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

10-11-2022 – இன்றைய ராசி பலன்கள்!

மேஷம்

இன்று தங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வீடு தேடி வரும் நாள். வாரிசுகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். பணியில் எதிர்பார்த்த மாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். தொழில் ரீதியாக அரசு வழி உதவிகள் கிடைக்கும். பரிமாற்றம் லாபகரமாக இருக்கும். பொன், பொருள் சேரும்.

ரிஷபம்

இன்று தங்களுடைய குடும்பத்தில் அமைதி நிலவ அண்டை வீட்டாரை அனுசரித்து செல்வது நல்லது. ஆடம்பர பொருள் சேர்க்கையால் கையிருப்பு குறையலாம். உறவினர்கள் வழியில் வீண் மன வருத்தங்கள் உண்டாகலாம். பெண்களுக்கு பணிச்சுமை குறையும். வியாபார வளர்ச்சிக்கான முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள்.

மிதுனம்

இன்று தங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வேலையில் தங்களுடைய திறமைக்கேற்ற புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய தொழில் ஆரம்பிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நல்லதொரு முடிவுக்கு வரும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

கடகம்

இன்று தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தும் நாளாக இருக்கும். நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகத்தில் சக நண்பர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள்.

சிம்மம்

இன்று தங்களுக்கு பணப்புழக்கம் சற்று குறைவாக காணப்படும். வேளையில் எதிர்பாராத சிக்கல்கள் தோன்றலாம். சிக்கனமாக செயல்படுவதன் மூலமாக பண பிரச்சனைகள் நீங்கலாம். தொழிலில் சில மாறுதல்களை செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். நண்பர்கள் மூலமாக உதவி கிடைக்கும்.

கன்னி

இன்று தங்களுக்கு மனமகிழ்ச்சி வழங்கும். சம்பவங்கள் நடைபெறும். நீங்கள் எதிர்பார்த்த உதவி தாமதம் இல்லாமல் கிடைக்கும். சகோதர, சகோதரிகளின் மூலமாக சுபச் செய்திகள் கிடைக்கப்பெற்று மன மகிழ்ச்சி அடைவீர்கள். பணியாற்றுபவர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும்.

துலாம்

இன்று தாங்கள் நினைத்த காரியம் நிறைவேற பொறுமையும், உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வதும் மிக முக்கியம். வாரிசுகளால் மன சங்கடங்கள் உண்டாகலாம். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையலாம்.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு தாராள தன வரவு இருந்தாலும் செலவுகளும் அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண சுப காரியம் முயற்சிகளில் சாதுர்யமாக செயல்பட்டால் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் நல்ல மாற்றம் உண்டாகும்.

தனுசு

இன்று தங்களுடைய குடும்பத்தில் சுபச் செலவுகள் உண்டாக்கலாம். வாரிசுகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரித்தாலும் உடன் பணியாற்றுபவர்களின் ஒத்துழைப்பால் பணிச்சுமை குறையும். வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும்.

மகரம்

இன்று தாங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியை பெறுவீர்கள். எதிரிகளின் பலம் குறைந்து தங்களுடைய பலம் அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் நன்மை உண்டாகும். பயணங்களால் அனுகூலம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும்.

கும்பம்

இன்று தங்களுக்கு உடல்நிலை மிகவும் சிறப்பாக இருக்கும் சுப செய்திகள் கிடைத்து மகிழ்ச்சியடைவீர்கள். வியாபாரத்தில் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். புதிய நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி பெறும். உத்யோகத்தில் சிலருக்கு மேலதிகாரிகளால் அனுகூல பலன் கிடைக்கும்.

மீனம்

இன்று தங்களுக்கு பண வரவு சுமாராக இருந்தாலும் தேவைகள் அனைத்தும் நிறைவேறும். குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்று. புதிய பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும்.

Exit mobile version