Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அதிகாலையிலேயே சுப செய்திகள் வரும்!

மேஷம்

இன்று தாங்கள் மன உறுதியுடன் பிரச்சனைகளை எதிர் கொள்வீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் பல புதிய மாற்றங்களால் லாபம் அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை வழங்கும். திருமண பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்க அனுகூலமான நாளாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

ரிஷபம்

இன்று தங்களுக்கு உறவினர்களால் சந்தோஷம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். செலவுகளை குறைப்பதன் மூலமாக பணப்பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தொழிலில் சில மாறுதல்களை செய்வதன் மூலமாக லாபம் இரட்டிப்பாகும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும்.

மிதுனம்

இன்று தாங்கள் நினைத்த காரியம் யாவும் நிறைவேறும். குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வியாபாரம் தொடர்பாக பரிமாற்றம் திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடக்குமோ. வேலையில் பிரச்சனைகள் சற்று குறையும். வருமானம் அதிகரிக்கும்.

கடகம்

இன்று தங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாக்கலாம். வாரிசுகள் வழியில் சிறு மன சங்கடங்கள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகளை ஏமாற்றத்தை வழங்கும். உத்தியோகத்தில் உடன் பணியாற்றுபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுப காரியங்கள் சில தடைகளுக்குப் பின் கைகூடும்.

சிம்மம்

இன்று தங்களுக்கு அலுவலகப் பணியில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரித்து காணப்படும். வாரிசுகள் பொறுப்புடன் நடந்து வரிசைக். புதிய வாகனம் வாங்கி மகிழ்ச்சி அடைகிறீர்கள். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகள், பொறாமைகள் குறைந்து லாபம் அதிகரிக்கும்.

கன்னி

இன்று தங்களுடைய வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். வாரிசுகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக வகுத்த திட்டங்கள் வெற்றியை வழங்கும். உடல்நிலை சிறப்பாக காணப்படும். வேளையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

துலாம்

இன்று தங்களுக்கு பண வரவு சுமாராகவே காணப்படும். வாகனங்களால் செலவுகள் உண்டாக்கலாம். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரிக்கும். சேமிப்பு குறையும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் நீங்கும். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

விருச்சிகம்

இன்று தங்களுடைய குடும்பத்தில் சுபச் செலவுகள் உண்டாகும். புத்திர வழியில் அனுகூலம் ஏற்படும். வழக்கு ரீதியாக வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்படுவதன் மூலமாக லாபம் அடையலாம். வருமானம் அதிகரிக்கும். பணி சுமை குறையும்.

தனுசு

இன்று தங்களுக்கு உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு புது தெம்பை வழங்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும்.

மகரம்

இன்று தங்களுடைய வியாபாரத்தில் பரிமாற்றம் திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும் தொழிலில் இருந்த போட்டிகள் நீங்கும். வருமானம் அதிகரிக்கும். நண்பர்கள் மூலமாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

கும்பம்

இன்று தங்களுக்கு அதிகாலையிலேயே சுபச் செய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். வாரிசுகளால் தங்களுடைய மதிப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தாங்கள் எடுக்கும் முயற்சிகளில் குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும்.

மீனம்

இன்று தங்களுடைய வாரிசுகளின் படிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரலாம். திருமண முயற்சிகளில் தடை, தாமதங்கள் உண்டாகலாம். சேமிப்பு குறையும். குடும்பத்தில் இதுவரையில் இருந்த பிரச்சனைகள் சற்று விலகும். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். அரசின் மூலமாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

Exit mobile version