15-11-2022- இன்றைய ராசி பலன்கள்!

0
166

மேஷம்

இன்று தங்களுக்கு மிகவும் சலிப் பூட்டும் நாளாக இருக்கும். அலுவலகத்தில் பல சிக்கல்களை சந்திக்க நேரலாம். ஆகவே பணிகளில் கவனம் தேவை. தவறுகள் நடக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. கணவன், மனைவியிடம் பல விரிசல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. ஆகவே அமைதி காப்பது நல்லது. பணவரவு குறைவாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

ரிஷபம்

இன்று தங்களுக்கு முன்னேற்ற கிழமை நாளாக இருக்கும். அலுவலகத்தில் தங்களுக்கு கொடுத்த பணிகளை சரியாக செய்து முடித்து தங்களுடைய மேலதிகாரிகளிடம் பாராட்டை பெறுவீர்கள். தங்களுடைய வாழ்க்கை துணையை புரிந்து கொண்டு அவர்களுடைய விருப்பத்தை நிறைவேற்றி அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பீர்கள். இன்றைய நாளில் நிதிநிலை சிறப்பாக இருக்கும். ஆகவே உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் எந்த விதமான குறைபாடும் இருக்காது.

மிதுனம்

இன்று தங்களுக்கு பொறுமை காக்கும் நாளாக இருக்கிறது. அலுவலகத்தில் வெற்றி பெறுவதற்கு முயற்சிகள் அதிகம் தேவைப்படும். இன்று வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஆகவே அமைதியுடனும், பொறுமையுடன் இருந்தால் நல்லது. இன்றைய நாளில் வரவு மற்றும் செலவு என இரண்டும் கலந்து காணப்படும். தாயின் உடல்நலத்தில் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

கடகம்

இன்று தங்களுக்கு பொறுப்புடன் இருக்க வேண்டிய நாளாக அமைகிறது. அலுவலகத்தில் தாங்கள் கையாளும் பணிகள் கடினமாக இருப்பதைப் போல உணர்வீர்கள். நிதி நிலைமை குறைந்து காணப்படும். மனதில் கவலை அதிகரிக்கும். ஆகவே உடல் உபாதைகள் உண்டாகும்.

சிம்மம்

இன்று தாங்கள் அமைதியுடன் இருக்க வேண்டிய நாள். அலுவலகத்தில் தங்களுடைய பணிகளுக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்காததை போல உணர்வீர்கள். தங்களுடைய வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. பணவரவு குறைந்து காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கன்னி

இன்று தங்களுக்கு வளர்ச்சிகரமான நாளாக இருக்கும். தங்களுடைய வளர்ச்சியை கண்டு தாங்களே மகிழ்ச்சி அடைவீர்கள். பணிகளை விரைவாக முடித்து மேலதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலைமை அதிகரித்து காணப்படும். இன்றைய நாள் முழுவதும் ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.

துலாம்

இன்று தங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். அலுவலகத்தில் தங்களுடைய பணிகளை கடினமாக உழைத்து முடிவுக்கு கொண்டு வருவீர்கள். ஆகவே தங்களுடைய மேலதிகாரிகளிடம் பாராட்டுகளை பெறுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். நிதிநிலைமை மகிழ்ச்சியாக இருக்காது. ஆரோக்கியத்தை பொறுத்தவரையில் எந்த விதமான பிரச்சினையும் இருக்காது.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு மன கவலை அதிகரிக்கும் நாளாக இருக்கும். அதனை தவிர்க்க நேர்மறையான எண்ணங்கள் தேவை. தங்களுடைய பணிகளில் கவனமுடன் இருக்க வேண்டும். இல்லை என்றால் தவறுகள் நடைபெறலாம். வாழ்க்கை துணையுடன் மனம் விட்டு பேசுவது நல்லது. இன்றைய நாளில் பணவரவு குறைந்தே இருக்கும். ஆரோக்கியத்தில் அதீத கவனம் தேவை.

தனுசு

இன்று தங்களுக்கு அமைதியுடன் இருக்க வேண்டிய நாளாக அமைகிறது. அலுவலகத்தில் கூடுதல் பொறுப்பு காரணமாக பணியில் மும்மூரமாக ஈடுபடுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவ அமைதியான அணுகுமுறையே எடை பண வரவு குறைந்து காணப்படும். என்பதால் தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். சளி தொடர்பான பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு.

மகரம்

இன்று தங்களுக்கு முன்னேற்றகரமான நாளாக இருக்கும். முக்கியமான முடிவுகளை மேற்கொள்ளலாம். அலுவலகத்தில் தாங்கள் செய்து பணிக்கு பாராட்டுக்கள் கிடைக்கும். தங்களுடைய வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். இன்று பண வரவு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கும்பம்

இன்று தங்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். அலுவலகத்தில் தங்களுடைய வேலைகளை சரியான நேரத்தில் முடித்து அதற்கு ஏற்ற சன்மானம் பெறுவீர்கள். வாழ்க்கை தனையுடன் அன்பை பகிர்ந்து கொள்வீர்கள். பணவரவு போதுமான அளவு இருக்கும். நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.

மீனம்

இன்று தங்களுக்கு உற்சாகமான நாளாக இருக்கும். அலுவலகத்தில் சக பணியாளர்களிடம் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆகவே பொறுமையுடன் இருக்க வேண்டும். வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. நிதிநிலை மகிழ்ச்சி அளிக்கும் விதத்தில் இருக்காது. கால் வலி ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.