Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று கடன் சுமை குறையும்!

மேஷம்

இன்று தங்களுக்கு வரவு திருப்தியாக இருக்கும் நாள். இல்லத்தில் இருப்பவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள் வீட்டு பராமரிப்பு செலவு ஏற்படும் உத்தியோகத்தில் சம்பள உயர்வு வருவதற்கான அறிகுறிகள் தோன்றலாம்.

ரிஷபம்

இன்று தங்களுடைய முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும் உடன்பிறப்புகள் வழியில் ஒரு நல்ல செய்தி வரும் தொழில் ரீதியாக புதிய பொறுப்புகள் கிடைக்கும் வழக்குகள் சாதகமாக முடியும்.

மிதுனம்

இன்று தங்களுடைய உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும் நாள். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வழி தோன்றும். நாணயமும், நேர்மையும் கொண்ட நண்பர்களால் உத்யோகத்தில் அதிகாரிகளின் அன்பிற்கு பாத்திரமாக திகழ்வீர்கள்.

கடகம்

இன்று தங்களுக்கு புதியபாதை தென்படும் நாள். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி வந்து சேரும் கொள்கைப் பிடிப்பை ஒரு சில சமயங்களில் தளர்த்திக் கொள்ள நேரலாம். தொலைபேசி வழித் தகவல் ஆதாயம் கொடுப்பதாக இருக்கும்.

சிம்மம்

இன்று தங்களுக்கு நண்பர்கள் மூலமாக நல்லதொரு தகவல் வந்து சேரும் உற்றார் உறவினர்களுக்கு கொடுத்துதவும் எண்ணம் அதிகரிக்கும். பயணத்தால் பலனுண்டு மதிய நேரத்திற்கு மேல் மறக்க முடியாத சம்பவமொன்று நடைபெறும்.

கன்னி

நேற்றைய பிரச்சினை ஒன்று இன்று நல்லதொரு முடிவிற்கு வரும். வாகன மாற்றம் செய்வது தொடர்பாக சிந்திப்பீர்கள் ஊதிய உயர்வுக்காக உத்தியோகம் மாறலாமா என்ற எண்ணம் தோன்றும்.

துலாம்

இன்று தங்களுக்கு வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். குடும்ப மூத்தவர்களிடம் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது மிகவும் நல்லது மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர் கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு வளர்ச்சி அதிகரிக்கும் நாள். வருமானம் கூடும் துணையாக இருப்பவர்கள் தோள் கொடுத்து உதவுவார்கள் திரும்பிச் சென்ற வரன் மறுபடியும் வரலாம். உத்தியோகத்தில் பணிநிரந்தரம் தொடர்பான தகவல் கிடைக்கும்.

தனுசு

இன்று தாங்கள் எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். உடனிருப்பவர்கள் உறுதுணையாக இருப்பார்கள் விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்காலம் தொடர்பான முக்கிய முடிவை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

மகரம்

இன்று தங்களுக்கு வரவை விட செலவு அதிகரிக்கும் நாள். விலையுயர்ந்த பொருட்கள் போன்றவற்றைக் கையாளும் பொழுது கவனமாக செயல்படுவது அவசியம். மருத்துவச் செலவு ஏற்படும் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும்.

கும்பம்

இன்று தங்களுக்கு அன்பான நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். பழைய கடன்களை வசூல் செய்வதில் அக்கறை காட்டுவர் பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர் உறவினர்களால் உதவி கிடைக்கும்.

மீனம்

நிழலாகத் தொடர்ந்து வந்த கடன் சுமை குறையும். வாரிசுகள் குடும்ப பொறுப்புணர்ந்து நடந்துக் கொள்வார்கள் உத்தியோகத்தில் தலைமை பொறுப்பிலிருப்பவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

Exit mobile version