Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த ராசிக்காரர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க!

மேஷம்

எதிர்காலம் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கும் நாள் எதிர்பார்த்த செய்திகள் கடிதம் மூலமாக வந்து சேரும் இழுபறியாக இருந்த காரியங்கள் சிறப்பாக நடைபெற்று முடியும். வழக்குகள் சாதகமாக முடியும், வேலைக்கான முயற்சி கைகூடும்.

ரிஷபம்

திருமணத்திற்கான முயற்சிகள் கைகூடும் நாள் கடன் சுமை குறையும், பல புதிய ஒப்பந்தங்கள் வந்து சேர்வதற்கான வாய்ப்புண்டு தந்தை வழி உறவில் விரிசல் மற்றும் சோர்வுகள் அகலும் திருப்தியான வருமானம் வரும்.

மிதுனம்

நன்மைகள் நடைபெறும் நாள், குடும்பத்திலுள்ள மனக்கசப்புகள் மாறுவதற்கான வாய்ப்புண்டு குழந்தைப்பருவம் நண்பர்களின் சந்திப்பு காரணமாக, பண தேவைகள் பூர்த்தியாகும். மற்றவர் நலனில் காட்டிய அக்கரைக்கு தற்போது ஆதாயம் கிட்டும்.

கடகம்

எந்த விஷயமாக இருந்தாலும் மன தைரியத்தோடு செயல்பட்டு சாதனை படைக்கும் நோக்கத்துடன் மற்றும் உற்சாகத்துடன் பனி செய்வீர்கள். உறவினரிடையே இருந்த பகை மாறும் பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றியை ஈட்டித்தரும்.
.
சிம்மம்

தபால் மூலமாக ஆச்சரியமான செய்தி ஒன்று வந்து சேரும் வாரிசுகள் குடும்ப பொறுப்பைவுணர்ந்து செயல்படுவார்கள் புதிய வீடு கட்டிக் குடியேறும் எண்ணம் தோன்றலாம். திருமண முயற்சிகள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புண்டு.

கன்னி

கையில் எடுத்த காரியங்கள் மிக எளிதில் வெற்றியுடன் முடியும் செல்வநிலை உயரும், கொடுத்த வாக்கை காப்பாற்ற கொள்கைப் பிடிப்புடன் செயல்படுவீர்கள் புண்ணிய காரியங்களுக்கு தாராளமாக பணத்தைச் செலவழிப்பீர்கள்.

துலாம்

போதுமான அளவு பணம் கைகளில் புரளும் நாள் உடன்பிறப்புகள் மூலமாக நல்ல செய்தி வந்து சேரும் கொடுக்கல்-வாங்கலில் ஆதாயம் கிட்டும் உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள்.

விருச்சிகம்

முன்னேற்றம் கூடும் நாள் எந்த காரியத்தையும் பக்குவமாக உரையாற்றி சாதிப்பீர்கள் தொழிலில் புதிய பார்ட்னர்கள் வந்திணைவார்கள் தொலைபேசி மூலமாக தொழில் முன்னேற்றம் தொடர்பான தகவல் வந்து சேரும்.

தனுசு

பரபரப்பாக பணிபுரியும் நாள் வளர்ச்சிக்கு நண்பருடைய முழுமையான ஒத்துழைப்பு இருக்கும். அதிகாரிகளை சகித்துக் கொண்டு செல்வது நல்லது உடல்நலத்தில் சிறுசிறு இடையூறுகள் ஏற்படலாம்.

மகரம்

சொகுசு வசதிகளை பெருக்கிக் கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளும் நாள், நண்பர்கள் உங்களுடைய முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பார்கள். வெளிநாட்டுப் பயணம் தங்கள் மனதின்படியே நடைபெறும் அதற்கான அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும்.

கும்பம்

சுபகாரியங்களுக்கான செலவுகள் அதிகரிக்கும் நாள், குடும்பத்தில் மூத்தவர்களின் யோசனைகளைக் கேட்டு நடப்பீர்கள் உத்தியோக நலன் கருதி பயணம் ஒன்றை முன்னெடுக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

மீனம்

உணர்ச்சிவசப்படுவது மூலமாக பகை வருவதற்கு வாய்ப்புண்டு புன்னகையுடன் பேசும் நண்பர்களால் சில சிக்கல்கள் உண்டாகலாம். வருமானம் வருவதற்கு முன்னரே செலவுகள் காத்திருக்கும் உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள்.

Exit mobile version