மேஷம்
என்று தங்கள் கேட்ட இடத்தில் உதவி கிடைத்து மகிழ்ச்சியடையும் நாள். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்வதற்காக முயற்சி செய்வீர்கள் உத்யோகத்தில் தங்களுடைய செயல்பாடு எல்லோரின் கவனத்தையும் ஈர்க்கும் விதமாக இருக்கும்.
ரிஷபம்
இன்று தங்களுடைய வளர்ச்சிகள் அதிகரிக்கும் நாள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் உடன்பிறப்புகள் வழியே ஒரு சுபகாரிய செய்தி வந்து சேரலாம். அதிகாரிகள் தங்களிடம் முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பதற்கான வாய்ப்புண்டு.
மிதுனம்
இன்று தங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்வது உங்களுடைய புத்திசாலித்தனம், உத்யோகத்தில் வெளி நாட்டிலிருந்து ஆதாயம் தரும் தகவல் வரலாம்.
கடகம்
இன்று தாங்கள் மேற்கொள்ளும் பயணங்கள் மூலமாக பலன் கிடைக்கும் நாள். பணத்தேவைகள் கடைசி சமயத்தில் பூர்த்தியாகும் ஆரோக்கியம் சீராக உணவில் கட்டுப்பாடு அவசியம் விரதம் வழிபாடுகளில் நம்பிக்கை ஏற்படும்.
சிம்மம்
இன்று தங்களுக்கு நல்ல செய்தி இல்லம் தேடிவரும் நாள். வெளிவட்டார பழக்க வழக்கம் அதிகரிக்கும் இட மாற்றம் வீடு மாற்றம் தொடர்பான சிந்தனை அதிகரிக்கும் நண்பர்களுக்காக விரயம் செய்ய நேரலாம்.
கன்னி
காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள் விலையுயர்ந்த பொருட்களை வாங்க முயற்சிப்பீர்கள் வருமானம் இரட்டிப்பாகும்.
துலாம்
இன்று தங்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் நாள். பொருளாதார நிலையை அதிகரித்துக் கொள்வீர்கள் தொலைபேசி வழித் தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும்.
விருச்சிகம்
மதிப்புமிக்க மனிதர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்ச்சியடையும் நாள். நாணயமும், நேர்மையும்யுடைய நண்பர்களால் நம்பிக்கைகள் யாவும் நடைபெறும் குடும்பத்தில் மகிழ்ச்சிக்குரிய சம்பவம் ஒன்று நிகழும்.
தனுசு
இன்று தங்களுக்குள்ள கடமைகளை சரியாக செய்து மகிழ்ச்சியடையும் நாள். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும் பணவரவு எதிர்பார்த்த படியே இருக்கும் குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்ச்சியடைவீர்கள்.
மகரம்
இன்று தங்களுடைய ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். அதிக முயற்சியின் பேரில் காரியமும் கைகூடும் அண்டை வீட்டாருடன் அனுசரித்து செல்வது மிகவும் நன்று மனக்குழப்பம் அதிகரிக்கலாம்.
கும்பம்
இன்று தாங்கள் எதிலும் யோசித்து செயல்பட வேண்டியது அவசியம். எவ்வாறாவது முடிந்துவிடும் என்று நினைத்த காரியம் ஒன்று முடியாமல் போவதற்கான வாய்ப்புண்டு உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரலாம்.
மீனம்
இன்று தங்கள் பொதுவாழ்வில் புகழ் அதிகரிக்கும் நாள். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள் தொழில் முன்னேற்றம் உண்டாகும் வாரிசுகளின் கல்வி முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றியடையும்.