Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நீங்கள் இந்த ராசியா? சற்றே நிதானத்துடன் செயல்படுங்கள்!

மேஷம்

இன்று தங்களுடைய மதிப்பும், மரியாதையும், அதிகரிக்கும் நாள். திருமண முயற்சிகள் கைகூடும் வாய்ப்புண்டு தொழில் ரீதியாக பயணம் ஒன்றை மேற்கொண்டு அதற்கான பலனும் உடனடியாக கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

ரிஷபம்

இன்று நீங்கள் ஒரு சந்தோஷமான வாய்ப்புகளை சந்திக்கும் நாள். பிரபலமானவர்களால் பிரச்சனைகள் முடிவுக்கு வரும் வீட்டை அலங்காரம் செய்து பார்ப்பதில் ஆர்வம் அதிகரிக்கும். வேலைக்காக விண்ணப்பம் செய்தவர்களுக்கு அழைப்புகள் வந்து சேரும்.

மிதுனம்

இன்று தங்கள் நிர்வாகத் திறமை வெளிப்படும் நாள். நீண்ட நாளைய ஆசையொன்று நிறைவேறும் விழாக்களில் பங்கேற்க அழைப்புகள் வருவதற்கான வாய்ப்புண்டு புதிய தொழில் ஆரம்பிக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

கடகம்

இன்று தங்களுக்கு நடப்பதெல்லாம் நன்மைக்குதான் என்று நினைக்க வேண்டிய நாள். வீணான வாக்குவாதங்களை செய்ய வேண்டாம் பணம் உள்ளிட்டவற்றை என்னும் போது பணியிலிருப்பவர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்படுவது மிகவும் நன்று.

சிம்மம்

இன்று தங்களுக்கு நண்பர்கள் மூலமாக நல்ல செய்தி வந்து சேரும். இடமாற்றமும் தொடர்பான சிந்தனை அதிகரிக்கும் பழகிய சிலரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்கும் சூழ்நிலை ஏற்படும்.

கன்னி

இன்று தங்களுக்கு அதிகாரத்திலிருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும் நாள். பணியாளர்களுடன் உண்டான பிரச்சனைகள் நல்லதொரு முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் ஏற்பட்ட பிரச்சனை நீடிக்கும்.

துலாம்

என்று தங்களுக்கு பொதுவாழ்வில் புகழ் அதிகரிக்கும் நாள். போட்டிகளை சமாளித்து வெற்றியடைவீர்கள் சங்கிலி தொடர் போல வந்த கடன் சுமையை குறைக்கும் முயற்சியில் இறங்குவீர்கள் உடல் ஆரோக்கியம் சீராகும்.

விருச்சிகம்

இன்று தங்கள் அன்பான நண்பர்களின் ஆதரவு கிடைத்து மகிழ்ச்சியடையும் நாள். அதிகாரப் பதவியிலிருப்பவர்கள் தங்களுடன் நட்பாக பழகுவார்கள் பணத்தேவைகள் பூர்த்தியாகும் வாய்ப்புண்டு தொழிலில் புதிய பங்குதாரர்களை இணைப்பது பற்றி சிந்திப்பீர்கள்.

தனுசு

இன்று தங்களுடைய வளர்ச்சிகள் கூடும் நாள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் உண்டாகும் வருமானம் திருப்தி தரும் திருமண முயற்சிகள் கைகூடும் கடமையிலிருந்த தொய்வான நிலை மாறும் உத்தியோக மாற்றம் உண்டு.

மகரம்

இன்று தங்களுக்கு உடன்பிறப்புகளின் வழியே இனிப்பான செய்தி வந்து சேரும் நாள். இழுபறியான காரியங்கள் இனிதே நிறைவு பெறும். நேற்றைய பிரச்சினை இன்று நல்லதொரு முடிவுக்கு வரும் வீடு வாங்கும் யோகமுண்டு.

கும்பம்

இன்று தங்களுடைய துணிச்சலும், தன்னம்பிக்கையும், அதிகரிக்கும் நாள். தொலைதூர நாடுகளுக்கான பயணம்உறுதியாவதற்கான வாய்ப்புண்டு சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாவதற்கான அறிகுறிகள் தோன்றலாம் சேமிப்பில் அக்கறை காட்டுவீர்கள்.

மீனம்

இன்று தாங்கள் நிதானமாக செயல்பட வேண்டிய நாள். நீங்கள் எதிர்பார்த்த காரியம் ஒன்று நடைபெறுவதில் தாமதம் உண்டாகலாம், உத்தியோகத்தில் உயர் மாற்றங்கள் உண்டாகும் பயணம் மூலமாக பலன் கிடைக்கும்.

Exit mobile version