Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நீங்க இந்த ராசிக்காரர்களா? இன்று தொட்டது துலங்கும்!

மேஷம்

இன்னல்கள் தீர ஆலய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள், வருவதற்கு முன்னரே செலவுகள் காத்திருக்கும் நண்பர்கள் ஒருவரை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் மறுபடியும் உங்களுக்கு திருப்பி வரலாம்.

ரிஷபம்

வீட்டில் மங்களகரமான நிகழ்ச்சிகள் நடைபெறும் அறிகுறிகள் தென்படலாம், பம்பரமாக சுழன்று பணியாற்றுவீர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் வாய்ப்பு கிடைக்கும்.

மிதுனம்

திருமண கனவுகள் நனவாகும் நாள், நண்பர்கள் நம்பிக்கை கொடுக்கும் விதமாக நடந்து கொள்வார்கள், பழமையான சடங்கு சம்பிரதாயங்களில் அதிக ஆர்வம் உண்டாகும். உத்தியோக முயற்சி வெற்றி தரும்.

கடகம்

முன்னேற்றம் கொடுக்கும் நாள், கைமாத்தாக கொடுத்த பணம் கைக்கு வந்து சேரும் பல நாட்களாக செய்ய நினைத்த காரியம் ஒன்றை இன்று செய்து முடிப்பீர்கள். பணிநிரந்தரம் தொடர்பான தகவல் வரலாம்.

சிம்மம்

வாரிசுகள் வழியே பெருமைகள் கூடும் நாள், பிரபலங்களின் சந்திப்பு கிடைக்கும் பூர்வீக சொத்துக்கள் விற்பனையால் கணிசமான லாபம் கிடைக்கும். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.

கன்னி

கடன் சுமை குறையும் நாள், காலை நேரத்தில் மகிழ்ச்சியான தகவல் வந்து சேரும் சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழ்ச்சியடைவீர்கள் . மேலதிகாரிகள் உங்கள் குறைபாடுகளுக்கு செவி சாய்ப்பார்கள்.

துலாம்

திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடக்கும் நாள் திடீர் தனவரவு உண்டு, நீண்ட நாள் ஆசை ஒன்று நிறைவேறும் உடன்பிறப்புகள் வழியில் உற்சாகமான தகவல் வந்து சேரலாம்.

விருச்சிகம்

வெற்றிக் கனியை எட்டிப் பறிக்கும் நாள் நண்பர்கள் மூலமாக நல்ல தகவல்கள் வந்துசேரும். தனலாபம் பலவழிகளில் வரும் பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

தனுசு

நீங்கள் எதிர்பாராத காரியம் ஒன்று நடந்து இன்பத்தை அதிகரிக்கும், சவால்களை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள் உடல்நலனில் கவனம் தேவை குடும்பத்தைச் சேர்ந்தவர்களை அனுசரித்து செல்வது நன்று.

திட்டமிட்ட காரியங்களில் திருப்பங்கள் உண்டாகும். பதவியில் இருப்பவர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள் குடும்பத்தில் மூத்தவர்களின் ஆலோசனையை கேட்டு நடப்பதன் மூலமாக நன்மை உண்டாகும்.

கும்பம்

எடுத்த காரியத்தை எளிதில் முடிக்கும் நாள் தொழில் மற்றும் புதிய கூட்டாளிகளை நினைக்கலாமா என்ற சிந்தனை மேலோங்கும் அதற்கான வாய்ப்புண்டு காலை நேரத்தில் செவிக்கு குளிர்ச்சியான செய்தி வந்து சேரும்.

மீனம்

மதியத்திற்கு மேல் மனக்குழப்பங்கள் அகலும் நாள் நேற்றைய பிரச்சினை இன்று நல்லதொரு முடிவிற்கு வரும் வீடு, இடம் வாங்க முன்னெடுத்த முயற்சிகள் வெற்றி பெறும் மூத்தவர்களின் ஆசியைப் பெற்று மகிழ்வீர்கள்.

Exit mobile version