Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நீங்க இந்த ராசியா! இன்னைக்கு ஒரே பணமழைதான் போங்க!

மேஷம்

இன்று தங்களுடைய நிர்வாகத் திறன் பளிச்சிடும் நாள். பொருளாதார நெருக்கடி நீங்கும் ஆசையாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்ச்சியடைவீர்கள் வெளிநாட்டிலிருந்து வரும் தகவல் ஆதாயம் தரும் விதமாக இருக்கும்.

ரிஷபம்

இன்று தங்களுக்கு மலை போல வந்த பிரச்சனையை பனி போல விலகும் நாள் சிக்கனத்தைக் கடைபிடித்து சிறப்படைவீர்கள் கடன் சுமை குறைய முன்னெடுத்த முடிவு வெற்றி பெறும் மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும்.

மிதுனம்

இன்று திருமண வரன்கள் வாயில் தேடி வரும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும் தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள்.

கடகம்

இன்று தாங்கள் நினைத்தது நிறைவேறும் நாள். எதிர்காலத் தேவைகள் பூர்த்தியாகும் அஞ்சல் வழியே அனுகூலமான தகவல் கிடைக்கும் தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் உடல்நலத்தில் கவனம் தேவை.

சிம்மம்

இன்று தாங்கள் யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். தடைகளும், தாமதங்களும் அதிகரிப்பதற்கான வாய்ப்புண்டு அடுத்தவர்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென அது தீமையில் முடியும் வீண் விரயங்கள் ஏற்படும் உறவினர்கள் பகை ஏற்படும்.

கன்னி

இன்று மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் உண்டாகும் நாள். எந்த வேலையையும் ஒருமுறைக்கு இருமுறை செய்யும் சூழ்நிலை ஏற்படும் குடும்ப முன்னேற்றத்திற்கு குறுக்கீடாக உறவினர்கள் இருந்து வருவார்கள்.

துலாம்

இன்று தங்களுடைய கடன் சுமை குறையும் நாள். காரிய வெற்றி ஏற்படும் பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் பயணங்களால் பலன் கிடைக்கும் விலகிச் சென்ற சொந்தங்கள் மீண்டும் வந்தினையும்

விருச்சிகம்

இன்று தங்களுக்கு வரவு திருப்திகரமாக இருக்கும் நாள். வாகனம் வாங்கும் யோகமுண்டு புதிய நண்பர்களின் அறிமுகத்தால் பொருளாதாரநிலை அதிகரிக்கும். தொழிலை விரிவு செய்ய செல்வந்தர்களின் உதவி கிடைக்கும்.

தனுசு

இன்று தங்களுடைய ஆன்மீக நம்பிக்கை அதிகரித்து நாள். பொருளாதார நெருக்கடி நீங்கும் தொழில் முன்னேற்றம் ஏற்படும் ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே வந்து சேரும் உத்தியோக மாற்றம் தொடர்பாக சிந்திப்பீர்கள்.

மகரம்

இன்று தங்களுக்கான வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். பணவரவிலிருந்த தடைகள் நீங்கும் காலை நேரம் கலகலப்பாக இருக்கும் தொழில் புதிய முதலீடுகள் செய்யும் சிந்தனை அதிகரிக்கும்.

கும்பம்

தடைப்பட்டு நின்ற காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும் நாள். சிக்கல்கள் தீர நண்பர்கள் உதவி புரிவார்கள் திடீர் பயணங்கள் காரணமாக சில திருப்பங்கள் உண்டாகும் தொழில் உள்ளிட்டவற்றில் இருந்து வந்த இடையூறுகள் நீங்கும்.

மீனம்

இன்று தங்களுக்கு பிரபலங்களின் உதவி கிடைக்கும் நாள். குடும்ப உறுப்பினர்களிடையே உண்டான கருத்து வேறுபாடுகள் அகலும் பயணங்களால் ஆதாயம் கிடைக்கும் புதிய ஒப்பந்தங்கள் லாபத்தை கொடுக்கும்.

Exit mobile version