Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்!

மேஷம்

இன்று தாங்கள் எதையும் சாதித்துக் காட்டுவீர்கள் எடுத்த வேலையை மிக எளிதில் முடித்து விடுவீர்கள். சுபகாரிய பேச்சுக்கள் முடிவாவதற்கான வாய்ப்புண்டு வீடு மாற்றம் தொடர்பாக சிந்திப்பீர்கள் உத்தியோக முயற்சி கைகூடும்.

ரிஷபம்

என்று தாங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள் வீட்டிற்குத் தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்ச்சியடையும் வாய்ப்பிருக்கிறது. எதிர்கால நலன் கருதி சில முக்கிய முடிவை மேற்கொள்வீர்கள்.

மிதுனம்

இன்றைய தினம் காலை சமயத்தில் கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள். மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் நீங்கும், நட்பு வட்டாரம் அதிகரிக்கும் பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும், கூடும் நண்பர்கள் எதிர்பாராத விதத்தில் உதவி புரிவார்கள்.

கடகம்

இன்று தாங்கள் யோசித்து செயல்பட வேண்டிய நாள். உறவினர்கள் வழியில் பிரச்சனைகள் ஏற்படலாம், தொழில் பங்குதாரர்கள் உங்களுடைய கருத்துக்கு ஒத்துழைக்க மறுப்பார்கள் வரவேண்டிய வரவுகள் தாமதப்படும்.

சிம்மம்

இன்று தங்களுடைய கனவுகள் யாவும் நனவாகும் நாள். நீண்ட தினங்களாக சந்திக்க நினைத்த ஒருவரின் சந்திப்பு கிடைத்து மகிழ்ச்சியடைவீர்கள். நண்பர்கள் உங்களுடைய தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள் அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும்.

கன்னி

இன்று தங்களுக்கு புதிய பாதை புலப்படும் நாள். நேற்றைய தின பிரச்சனை ஒன்று இன்று நல்லதொரு முடிவிற்கு வரும். தொழிலில் எதிர்பார்த்தபடி லாபம் கிடைக்கும் வாரிசுகளின் திருமணக்கனவுகள் நனவாக பாடுபடுவீர்கள்.

துலாம்

இன்று தங்களுடைய இல்லம் தேடி சுபச் செய்தி வந்து சேரும் நாள். வாகனங்களில் செல்லும்போது கூடுதல் கவனம் தேவை மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

விருச்சகம்

இன்று தாங்கள் முக்கிய புள்ளிகளின் சந்திப்பு காரணமாக, முன்னேற்றம் காணும் நாள்.. வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள், வாரிசுகள் வழியில் நல்ல செய்தி ஒன்று வந்து சேரலாம். இடம், பூமியால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

தனுசு

இன்று தாங்கள் நிதானத்துடனும், பொறுமையுடனும், செயல்பட வேண்டிய நாள். வரவுக்கேற்ற செலவு வரும் சொந்த பந்தங்களின் சந்திப்பு கிடைக்கும். திட்டமிட்ட பயணிகளில் திடீர் மாற்றங்கள் செய்ய நேரிடலாம், ஆரோக்கியம் சீராகும்.

மகரம்

இன்று தங்களுக்கு வரவை விட செலவு அதிகரிக்கும் நாள். நவீன பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். தலைமைப் பொறுப்புகள் தானாக தேடி வரலாம். உத்தியோகத்தில் வேறு நிறுவனங்களிலிருந்து அழைப்புகள் வருவதற்கான வாய்ப்புண்டு.

கும்பம்

இன்று தாங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்ச்சியடைவீர்கள். தேக்க நிலையிலிருந்த காரியங்களை துரிதமாக செய்து முடிப்பீர்கள், வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும் சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும்.

மீனம்

இன்று குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும் நாள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாக உத்தியோக நலன் கருதி எடுத்த புது முயற்சி வெற்றியை தரும். நண்பர்களால் அன்புத் தொல்லைகள் உண்டாகலாம் கட்டிடப் பணி தொடரும்.

Exit mobile version