Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி நிச்சயம்!

மேஷம்

மன அமைதி கிடைக்க அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள் அலுவலக பணிகளால் அலைச்சல் அதிகமாகலாம் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நன்று. பயணத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது மிக நன்று.

ரிஷபம்

நேற்று தடைப்பட்ட காரியமொன்று இன்று நடைபெறலாம், புதிய பொறுப்புகள் வந்து சேரும் நாள், புகழ்மிக்கவர்களுடைய சந்திப்பு கிடைக்கும். இதுவரையில் இழுபறியாக இருந்த காரியங்கள் சுமுகமான முடிவுக்கு வரும்.

மிதுனம்

சந்தோஷம் அதிகரிக்கும் நாள், குடும்ப வருமானத்தை உயர்த்த திட்டம் தீட்டுவீர்கள் விலகிப் போன உறவினர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். வெளி வட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும்.

கடகம்

நற்காரியங்கள் நடைபெறும் நாள், குடும்பத்தினர்கள் உடன் உண்டான கருத்துவேறுபாடுகள் மாறலாம் மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும் உத்தியோகத்தில் கேட்ட உதவிகள் உடனடியாக கிடைப்பதற்கான வாய்ப்புண்டு.

சிம்மம்

நண்பர்கள் மூலமாக நற்செய்தி வரும் எண்ணங்கள் எளிதாக நிறைவேறும் உறவினர்கள் மூலமாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் அஸ்தி வாரத்துடன் நின்ற கட்டிடப் பணிகள் மறுபடியும் தொடரும்.

கன்னி

சுப செய்திகள் வந்து சேரும் நாள் பொருளாதார நிலையை உயர்த்த புதிய முயற்சிகளில் இறங்குவீர்கள், உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பும் கிடைக்கும் நிச்சயித்தபடியே பயணம் மேற்கொள்வீர்கள்.

துலாம்

பெரிய மனிதர்களின் உதவி கிடைக்கும் அதன் மூலமாக மகிழ்ச்சி கூடும் நாள் வீடு வாங்கும் முயற்சி வெற்றி பெறும் இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் அமைவதற்கான வாய்ப்புண்டு, சகோதர ஒத்துழைப்புண்டு.

விருச்சிகம்

தங்களுடைய செல்வாக்கு அதிகரிக்கும் நாள், வாழ்க்கை தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் கொடுத்த வாக்குறுதி உள்ளிட்டவற்றை காப்பாற்றுவீர்கள். குடும்பத்தில் உண்டான கருத்து வேறுபாடுகள் அகலும் நாள்.

தனுசு

தடைகள் யாவும் தகர்ந்து போகும் நாள், தனித்து செயல்படும் முயற்சியில் ஆர்வமிருக்கும் சுபச் செய்திகள் இல்லம் தேடி வரும் பயணத்தால் பலன் உண்டாகும் உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றம் வரும்.

மகரம்

நம்பிக்கைகள் யாவும் நடைபெறும் நாள், வரவு திருப்தியாக இருக்கும் மங்கல நிகழ்ச்சிகளில் பங்கேற்று கொள்ள அழைப்புகள் வரலாம் நீண்ட தூர பயணங்கள் செல்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

கும்பம்

குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும் அருகிலுள்ளவர்களால் ஏற்பட்ட சண்டை சச்சரவுகள் முடிவுக்கு வரும் மங்கள நிகழ்ச்சிகள் வீட்டில் நடைபெறுவதற்கான அறிகுறி உண்டாகலாம். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும்.

மீனம்

திட்டமிட்டபடியே வெற்றி பெறும் நாள் கொடுத்த வாக்கை காப்பாற்ற கொள்கைப் பிடிப்புடன் செயல்படுவீர்கள் அரசு வழியில் எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைப்பதற்கான அறிகுறிகள் உண்டாகலாம்.

Exit mobile version