Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று திருமண வாய்ப்புகள் கைகூடும்!

மேஷம்

நேற்றைய பிரச்சனையொன்று இன்று நல்லதொரு முடிவுக்கு வரும் நாள். பணப்பற்றாக்குறை நீங்கும். அருகிலிருப்பவர்களால் உண்டான பகை மாறும் வீடு, இடம், வாங்க எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

ரிஷபம்

என்று தங்களுடைய விடா முயற்சிக்கு வெற்றி கிடைக்கும் நாள். பல தடைகள் எளிதில் நீங்கும் நீண்ட தூர பயணங்கள் செல்ல முன்னெடுத்த திட்டம் கை கூடுவதற்கான அறிகுறி தோன்றும். நூதன பொருட்சேர்க்கை ஏற்படும்.

மிதுனம்

இன்று வெளிவட்டார தொடர்பு விரிவடையும் நாள். அரசு வழிச் சலுகைகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள், உத்தியோகத்தில் பணத்தை கையாளும் போது கவனம் தேவை.

கடகம்

இன்று தாங்கள் தைரியத்துடன் செயல்பட்டு சாதனைகள் புரியும் நாள். உற்சாகத்தோடு பணியாற்றுவீர்கள் மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள், உத்தியோகத்தில் மனதிற்குப் பிடித்த இடத்திற்கு மாறுதல் கிடைப்பதற்கான வாய்ப்புண்டு.

சிம்மம்

இன்று தங்களுக்கு இனிமையான நாளாக இருக்கும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாதற்கான வாய்ப்புண்டு, உத்தியோகத்தில் தற்காலிக பணிகளில் இருப்பவர்கள் நிரந்தர பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும்.

கன்னி

இன்று தங்களுக்கு திருமண வாய்ப்புகள் கைகூடும் நாள். கடமையிலிருந்த தொய்வு நிலை நீங்கும் பக்குவமாகப் பேசி காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

துலாம்

இன்று தாங்கள் நன்றாக யோசித்து செயல்பட வேண்டிய நாள். உதவி செய்வதாக தெரிவித்தவர்கள் கடைசி சமயத்தில் கை விரிப்பார்கள், உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரலாம்.

விருச்சகம்

இன்று தங்களுடைய வரவு அதிகரிக்கும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும் வாழ்க்கையின் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும் அரசியல்வாதிகளால் அனுகூலம் ஏற்படும்.

தனுசு

இன்று தாங்கள் தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் கூடும் நாள். பரபரப்புடன் செயல்படுவீர்கள் நீண்ட தினங்களாக எதிர்பார்த்த பணவரவுகள் கைக்கு வர நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும்.

மகரம்

இன்று தங்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும் நாள். சொந்தபந்தங்கள் மூலமாக சுபச்செலவுகள் ஏற்படும் சூழ்நிலை வரலாம், உத்தியோகத்தில் இடமாற்றங்கள் மற்றும் இலாகா மாற்றங்கள் எதிர்பார்த்த படியே இருக்கும்.

கும்பம்

இன்று ஒற்றுமை அதிகரிக்கும் நாள். வழக்குகள் சாதகமாக முடியும் பழைய வாகனத்தை கொடுத்து புதிய வாகனம் வாங்கும் எண்ணம் ஏற்படும், கடிதம் மூலமாக மகிழ்ச்சியான தகவல் ஒன்று வந்து சேரலாம்.

மீனம்

பொது காரியங்களில் இறங்கி புகழ் சேர்க்கும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும், தொழில் ரீதியாக புதிய பங்குதாரர்கள் வந்திணைவார்கள்.

Exit mobile version