மேஷம்
இன்று தங்களுடைய நிதி நிலை அதிகரித்து நிம்மதி கொடுக்கும் நாள். நினைத்தது நிறைவேறும் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும் தொழில் முன்னேற்றத்திற்கு பிரபலங்களின் ஒத்துழைப்பு உறுதுணையாக இருக்கும்.
ரிஷபம்
நட்பு வட்டாரம் அதிகரிக்கும் நாள். தங்களை நம்பி வருபவர்களுக்கு கை கொடுத்து உதவி புரிவீர்கள். வாழ்க்கைத்துணை வழியே வந்த பிரச்சனை நீங்கும் உத்தியோகத்தில் எதிர்பார்த்த அனுகூலம் உண்டு.
மிதுனம்
இன்று தாங்கள் உற்சாகத்துடன் பணியாற்றும் நாள். தடைப்பட்டுவந்த காரியங்கள் தானாகவே நடக்கும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும் உத்யோகத்தில் இழந்த செல்வாக்கை மறுபடியும் பெறுவீர்கள்.
கடகம்
இன்று தங்களுக்கு யோகமான நாள். தாங்கள் யோசிக்காமல் செய்யும் காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். இல்லத்தின் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்ச்சியடைவீர்கள் உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும்.
சிம்மம்
ஆதாயம் கொடுக்கும் தகவல் அக்கறை உண்டாகும் நாள். பெற்றோர் வழியில் உண்டான பிரச்சனை நீங்கும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் இணைவார்கள் உத்தியோக முயற்சிக்கு நண்பர்கள் உதவி புரிவார்கள்.
கன்னி
இன்று தங்களுக்கு இருந்து வந்த வம்பு, வழக்குகள், தீர்ந்து வளம் காணும் நாள். நடைபெறாது என நினைத்திருந்த காரியம் ஒன்று நடைபெற்று மகிழ்ச்சியை கொடுக்கும். உத்யோகத்தில் உங்களுடைய செயல்பாடு மேலதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும்.
துலாம்
தொலைபேசி மூலமாக ஆதாயம் கிடைக்கும் நாள். மங்கல ஓசை இல்லத்தில் கேட்க வழிபிறக்கும். எதிர்பாராத தனலாபம் கிடைக்கும் தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும், செயல்படுவீர்கள்.
விருச்சகம்
இன்று தங்கள் எதிலும் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும் வீணான குழப்பம் தோன்றுவதற்கான வாய்ப்புண்டு. அடுத்தவர்களுக்கு பொறுப்பு வழங்குவதை தவிர்ப்பது மிகவும் நல்லது, உடல்நலனில் அக்கறை தேவைப்படும் நண்பர்களை நம்பி செயல்பட முடியாது.
தனுசு
இன்று தங்களுக்கு பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். தொழில் வியாபாரத்தில் ஆக்கபூர்வமான மாற்றங்களை சந்திக்க நேரும். பக்கபலமாக இருப்பவர்கள் உங்களை விட்டு விலகினாலும் கவலைப்பட மாட்டீர்கள்.
மகரம்
இன்று தங்களுக்கு பொதுவாழ்வில் புகழ் அதிகரிக்கும் புதிய நண்பர்களால் பொருளாதார நிலை அதிகரிக்கும். கணிசமான தொகை கைகளில் புரளும் தொலைபேசி வழித் தகவல் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும்.
கும்பம்
இன்று தங்களுக்கு புதிய பாதை புலப்படும் நாள். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் அஸ்திவாரத்தில் நின்ற கட்டிடப் பணியை மீண்டும் தொடர்வீர்கள் பேச்சாற்றலால் பிரபலங்களின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள்.
மீனம்
இன்று தங்களுக்கு இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகி சிறப்புகள் வந்து சேரும் நாள். நேற்று விட்டுப்போன பணிகளை இன்று செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியம் சீராகும் தொழில் வளர்ச்சிக்கு குறியீடாக இருந்தவர்கள் விலகிச்செல்வார்கள்.