Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்!

மேஷம்

இன்று தங்களுக்கு வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும் நாள். நண்பர்களால் நல்ல காரியம் நடைபெறும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும், வளர்ச்சி பாதைக்கு ஆரம்பப் புள்ளியாக இருந்தவர்களை சந்தித்து மகிழ்ச்சியடைவீர்கள்.

ரிஷபம்

இன்று தாங்கள் எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். பாசத்துடன் பழகியவர்க்ளின் ஒத்துழைப்பு கிடைக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள் ,பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும், வருமானம் திருப்திகரமாக இருக்கும்.

மிதுனம்

தங்கள் திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். வியாபார போட்டிகளை சமாளிப்பீர்கள் அன்றாட பணிகள் சிறப்பாக நடைபெறும், நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்ப்பார்கள்.

கடகம்

இன்று தங்களுக்கு குடும்பச் சுமை அதிகரிக்கும் நாள். பரிவர்த்தனைகள் திருப்திகரமாக இருக்கும். தாமதமான காரியங்கள் இன்று மிகவும் துரிதமாக நடைபெறும் மாற்றினத்தவர்கள் ஒத்துழைப்புடன் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

சிம்மம்

இன்று தங்களுடைய திருமண முயற்சி கைகூடும் நாள். நண்பர்களின் உதவியுடன் தொழிலில் முதலீடு செய்ய முன்வருவீர்கள், வாரிசுகளால் உதிரி வருமானங்கள் வந்து சேரும் ,ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவம் உறுதுணைபுரியும்.

கன்னி

இன்று தங்களுடைய செல்வாக்கு அதிகரிக்கும் நாள். வீடு, இடம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் ஏற்படும். தொலைதூரப் பயணங்கள் உறுதியாகும். விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்ச்சியடைவீர்கள்.

துலாம்

இன்று தங்களுக்கு பரிவர்த்தனையில் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கும் நாள். குடும்ப முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும் நண்பர்களிடம் உண்டான கருத்து வேறுபாடுகள் மறையும் பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும்.

விருச்சகம்

இன்று தங்களுடைய நிதி நிலை அதிகரிக்கும் நாள். தொழில் வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்வாதிகளால் அனுகூலம் ஏற்படும் நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நல்ல விதத்தில் நடைபெறும்.

தனுசு

இன்று தாங்கள் பிரயோகம் செய்த சொற்களால் பிரச்சனைகள் உண்டாகும் நாள். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது மிகவும் நன்று. சுதந்திரமாக எதையும் செய்ய முடியாது, விரயங்களை தவிர்க்க விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

மகரம்

இன்று தங்களுக்கு வரன்கள் வாயில் தேடி வரும் நாள். பாசமிக்கவர்கள் பக்கபலமாக இருப்பார்கள் குடும்பத்தில் அமைதி நிலவும். வாகனம் மாற்ற சிந்தனை மேலும் வாரிசுகள் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள்,

கும்பம்

நேற்று உண்டான பிரச்சினை இன்று நல்லதொரு முடிவுக்கு வரும் நாள். நினைத்த காரியம் நிறைவேறும். நிம்மதிக்காக வழிபாட்டை முன்னெடுப்பீர்கள். இடமாற்றம், ஊர்மாற்றம், எதிர்பார்த்தபடி அமையும்.

மீனம்

இன்று தங்களுக்கு ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும் நாள். அருகிலிருப்பவர்களால் தொல்லைகள் நீங்கும். வரவு திருப்திகரமாக இருக்கும் இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.

Exit mobile version