Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஒரே குஷிதான்!

மேஷம்

இன்று தங்களுடைய சிக்கல்கள் விலகி சிகரத்தைத் தொடும் நாள். சாமர்த்திய பேச்சால் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் அதிகரிக்கும் அலுவலகப் பணிகள் துரிதமாக நடக்கும்.

ரிஷபம்

இன்று தங்களுக்கு அனுகூலமான தகவல்கள் அதிகாலையிலேயே வந்து சேரும் நாள். நண்பர்களின் நம்பிக்கைக்குரிய விதமாக நடந்துகொள்ள வெளிநாட்டுத் தொடர்பு நலம் பயக்கும், வரன்கள் வாயில் தேடி வரும்.

மிதுனம்

இன்று தங்களுக்கு உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாள். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவத்தை முன்னெடுப்பீர்கள் நாட்டுப்பற்று மிக்கவர்கள் ஆதரவு காரணமாக, இல்லத்தில் பிரச்சனைகள் தீரும்.

கடகம்

இன்று தங்களுடைய வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும், பரிவர்த்தனையிலிருந்த சிக்கல்கள் நீங்கி ஒழுங்காகும், பொருளாதார முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

சிம்மம்

பெரிய மனிதர்களின் சந்திப்பால் பிரச்சனைகள் தீரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். புதிய வாகனம் வாங்க திட்டத்தை வகுப்பீர்கள் வரும் சந்தர்ப்பங்களை உபயோகப்படுத்திக் கொள்வது மிகவும் நல்லது.

கன்னி

இன்று தங்களுக்கு அன்பான நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். வழக்குகளில் வெற்றி கிடைக்கும் தொழில் குறித்த முக்கிய புள்ளிகளை சந்திப்பீர்கள் சகோதரர்கள் நம்பிக்கைக்குரிய விதமாக நடந்து கொள்வார்கள்.

துலாம்

இன்று தங்களுக்கு பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். முடிவு செய்த காரியம் முடிவுசெய்தபடியே நடைபெறும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளும், பதவிகளும், உங்களை தேடி வரும் விவாக பேச்சுக்கள் முடிவாவதற்கான வாய்ப்புண்டு.

விருச்சகம்

இன்று தங்களுக்கு பொதுவாழ்வில் புகழ் அதிகரிக்கும் நாள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும், குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும், உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள்.

தனுசு

இன்று தங்களுடைய முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். அருகிலிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது மிகவும் நல்லது. சுபவிரயங்கள் அதிகமாகலாம், உத்தியோகத்தில் எதிர்பாராத இடமாற்றங்கள் மற்றும் இலாகா மாற்றங்கள் உள்ளிட்டவை வருத்தத்தை உண்டாக்கலாம்.

மகரம்

இன்று தங்களுக்கு வரவு திருப்திகரமாக இருக்கும் நாள். வீட்டை விரிவுபடுத்தி கட்ட முயற்சி செய்வீர்கள், ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும் உத்தியோகத்தில் இழந்த பதவி மீண்டும் கிடைக்கும்.

கும்பம்

இன்று தாங்கள் வாக்குவாதங்களை ஒதுக்கிவைத்துவிட்டு வளம் காண வேண்டிய நாள். வளர்ச்சியில் தளர்ச்சி உண்டாகும். வரவை விட செலவு அதிகரிக்கும், அருகிலிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது மிகவும் நல்லது.

மீனம்

இன்று தங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் நீங்கும், முன்னோர்களின் சொத்துக்களில் லாபம் கிடைத்து மகிழ்ச்சியடைவீர்கள் அதிகாரப் பதவியிலிருப்பவர்களால் நன்மை ஏற்படும்.

Exit mobile version