Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பொறுமை மிக அவசியம்!

மேஷம்

இன்று தங்களுக்கு ஆதாயம் கொடுக்கும் வகையிலான தகவல் அதிகாலையிலேயே வந்து சேரும் நாள். திறமைகள் வெளிப்படும், திடீர் பணவரவு ஏற்படும், தொழில் நலன் கருதி எடுத்த முயற்சி கைகூடும், அரசு வேலை கிடைப்பதற்கான அறிகுறிகள் தோன்றலாம்.

ரிஷபம்

இன்று தங்கள் மிகவும் பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள், வருமானம் திருப்திகரமாக இருக்கும். தொழிலில் மாற்றம் செய்வது தொடர்பாக சந்திப்பீர்கள் உத்யோகத்தில் உங்களுடைய செயல்பாடுகள் அடுத்தவர்கள் கவனத்தை ஈர்க்கும் விதமாக இருக்கும்.

மிதுனம்

இன்று தங்களுக்கான வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள், நண்பர்கள் மூலமாக நற்காரியங்கள் நடைபெறும், உத்தியோகத்தில் உடன் பணியாற்றுபவர்களின் உதவி கிடைக்கும், புத்திசாலித்தனமான செயல்பாடுகளால் புகழடைவீர்கள்.

கடகம்

இன்று தங்களுடைய பொருளாதார நிலை அதிகரிக்கும் நாள், இளைய சகோதரம் மூலமாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழிலில் நண்பர்களால் நன்மை ஏற்படும், குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

சிம்மம்

இன்று தங்களுக்கு வெற்றிச் செய்திகள் வீடு தேடி வரும் நாள், வீட்டிற்கு தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். பாக்கிகளும் வசூலாகும், தொலைதூரப் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

கன்னி

பரிமாற்றத்தில் இருந்த சிக்கல்கள் ஒழுங்காகும், எப்படி நடக்குமோ என நினைத்திருந்த காரியம் நல்லபடியாக நடந்தேறும். தொழில் ரகசியங்களை வெளியில் செல்லாமல் இருப்பது மிகவும் நன்று.

துலாம்

இன்று தங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும் நாள், வீட்டு உறுப்பினர்களிடம் கோபமாக பேசிவிட்டு அதன் பிறகு வருத்தத்திற்குள்ளாவீர்கள். தொலைபேசி வழித் தகவல் தொல்லை கொடுப்பதாக இருக்கும், மருத்துவ செலவுகள் ஏற்படும்.

விருச்சிகம்

இன்று தாங்கள் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றி மகிழ்ச்சியடையும் நாள், பரிமாற்றத்தில் திருப்தி உண்டாகும். தொலைபேசி வழி தகவல் மகிழ்ச்சி உண்டாகும், தொழில் முன்னேற்றம் ஏற்படும், பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும்.

தனுசு

இன்று தங்களுக்கு காலையில் சலசலப்பும், மாலையில் கலகலப்பும், உண்டாகும் நாள், நண்பர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் மறுபடியும் உங்களிடமே வந்து சேரும். உத்யோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும் மனநிம்மதி குறையும்.

மகரம்

இன்று தாங்கள் பக்குவமாக பேசி பாராட்டுக்களைப் பெறுவீர்கள், புதிய முயற்சிகள் வெற்றி பெறும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும், உத்தியோக உயர்வால் குடும்பத்தைவிட்டு வெளியூரில் பணிபுரிவதற்கான சூழ்நிலை உண்டாகலாம்.

கும்பம்

இன்று தங்களது முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். முக்கிய புள்ளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சொத்துப் பிரச்சினைகள் சுமுகமாக முடிவடையும், மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும், கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றி மகிழ்ச்சியடைவீர்கள்.

மீனம்

இன்று தங்களுக்கு வரவு திருப்திகரமாக இருக்கும் பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவார்கள். வாழ்க்கைத்துணை வழியே மகிழ்ச்சி தரும் செய்தி வரும் நீண்ட நாளைய பிரார்த்தனை நிறைவேறும்.

Exit mobile version