Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இன்று இந்த ராசிக்காரர்களுக்கு தொட்டது தொலங்கும்!

மேஷம்

இன்று தங்களுடன் தகராறு செய்தவர்கள் தானாக விலகி செல்லும் நாள், வரவு திருப்திகரமாக இருக்கும். நினைத்த காரியத்தை நினைத்த சமயத்தில் செய்து முடிப்பீர்கள், உயர்ந்த மனிதர்களின் சந்திப்பால் உத்தியோக வாய்ப்பு கிடைக்கலாம்.

ரிஷபம்

இன்று தங்களுடைய எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள், வாரிசுகளின் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும், புண்ணிய காரியங்களுக்கும் கொடுத்து உதவுவீர்கள் தொழில் முயற்சி வெற்றி பெறும்.

மிதுனம்

இன்று தங்கள் குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்ச்சியடையும் நாள், பரிமாற்றத்தில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும், உறவினர்கள் மூலமாக இருந்துவந்த பிரச்சினை நல்லதொரு முடிவிற்கு வரும்.

கடகம்

இன்று தங்களது தொல்லை கொடுத்தவர்கள் தங்களை விட்டு விலகிச் செல்லும் நாள், தொழில் போட்டிகள் நீங்கும், உத்தியோகம் தொடர்பாக தாங்கள் எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும், பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

சிம்மம்

இன்று தாங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள், மற்றவர்களுக்காக எடுத்த முயற்சியில் ஆதாயம் இருக்காது, நிதானமாக செயல்படுவது மிகவும் நன்று, உத்தியோகத்தில் பிரச்சினை நீடித்து வரும்.

கன்னி

இன்று தங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும் நாள், உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரலாம், மறக்க முடியாத அனுபவங்கள் ஏற்படும், வேகமாக ஆரம்பித்த காரியம் பாதியில் நின்று போகலாம்.

துலாம்

இன்று தங்களுக்கு தடைகள் அதிகரிக்கும் நாள், உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடலாம், கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாமல் போகலாம், மற்றவர்களின் விவகாரங்களில் பட்டும் படாமல் நடந்துகொள்வது மிகவும் நன்று.

விருச்சிகம்

இன்று தங்களுடைய இல்லத்தில் நல்ல காரியங்கள் நடைபெறும், கடிதங்கள் மூலமாக நல்ல தகவல்கள் வந்துசேரும், சொத்துக்களால் வந்த பிரச்சினைகள் சுமுகமாக முடிவடையும், உத்தியோகத்தில் அதிகாரிகள் ஆதரவு திருப்திகரமாக இருக்கும்.

தனுசு

இன்று தங்களுடைய தடைகள் யாவும் அகலும் நாள், காணாமல் போன பொருள் கைக்கு வந்து சேரலாம். கடிதங்கள் மூலமாக நல்ல தகவல்கள் வரலாம், செலவுகளை குறைத்து சேமிப்பை அதிகரிப்பதில் அக்கரை காட்டுவீர்கள்.

மகரம்

இன்று தங்களுக்கு நல்ல தகவல் இல்லம் தேடி வரும். பிரபலங்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் பிரச்சனை உண்டாகலாம்.

கும்பம்

இன்று தங்கள் முன்னேற்றம் காண்பதற்காக முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் நாள், மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறி உங்கள் கூட்டு முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவர். ஆரோக்கிய தொல்லைகள் நீங்கும்.

மீனம்

இன்று நண்பர்கள் மூலமாக தங்களுக்கு நல்ல தகவல் வந்து சேரும் நாள் வரவும், செலவும், சமமாக இருக்கும். பயணங்கள் அனுகூலம் தரும் விதமாக அமையும், எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

Exit mobile version