Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காலையிலேயே இனிப்பான செய்தி வரும்!

மேஷம்

இன்று தங்க;ளுடைய அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள், எதிர்பாராத பணவரவு உண்டு, உங்கள் திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும், அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

ரிஷபம்

இன்று தங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்கும் நாள், புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும், குடும்பத்தை சார்ந்தவர்களிடம் விட்டு கொடுத்து செல்வது மிகவும் நன்று, வெளியூர் பயணத்தால் அலைச்சல் ஏற்படும் கையிருப்புகள் விரயமாகும்.

மிதுனம்

இன்று தாங்கள் நினைத்தது நிறைவேறும் நாள், மனநிம்மதிக்காக ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள்.தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்களின் சந்திப்பு கிடைக்கும், இல்லத்தில் இருப்பவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

கடகம்

இன்று தங்களுடைய மனக்கலக்கம் நீங்கும் நாள், விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேர்வார்கள், நேற்று மறதியால் செய்ய மறந்த காரியத்தை இன்று செய்து முடிப்பீர்கள், தொழில் வளர்ச்சி ஏற்படும்.

சிம்மம்

இன்று தங்களுக்கு யோகமான நாள், வீடு மாற்றம் தொடர்பாக சந்திப்பீர்கள், சகோதர வழியில் விரயங்கள் உண்டாகும். வாகன மாற்றம் தொடர்பாக சிந்திப்பீர்கள், உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்பு வந்து சேரும்.

கன்னி

இன்று தாங்கள் சந்தித்தவர்களால் சந்தோஷம் அதிகரிக்கும் நாள், எதிர்கால கனவுகளை நனவாக்க பயணம் ஒன்றை முன்னெடுப்பீர்கள், திருமண முயற்சி வெற்றி பெறும், உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

துலாம்

இன்று தங்களுக்கு தள்ளிப்போன காரியங்கள் தானாகவே நடைபெறும் நாள், உடல் ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும், உத்தியோகத்தில் பணிநிரந்தரம் தொடர்பான தகவல் கிடைக்கும்.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு அன்பான நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள், எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும், உத்தியோகத்தில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும்.

தனுசு

இன்று தங்களுக்கு மங்களகரமான செய்தி இல்லம் தேடிவரும் நாள், மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவார்கள், சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள், புதியவர்களின் சந்திப்பு கிடைக்கும்.

மகரம்

இன்று தங்களுக்கு யோகங்கள் யாவும் நடைபெறுவதற்கு யோசித்து செயல்பட வேண்டிய நாள், சஞ்சலங்கள் அதிகரிக்கும் வரவை விட செலவு அதிகமாக இருக்கும். இதை செய்வோமா? அதைச் செய்வோமா? என்ற மனக்குழப்பம் அதிகரிப்பதற்கான வாய்ப்புண்டு.

கும்பம்

இன்று தங்களுக்கு அதிகாலையிலேயே அனுகூலமான தகவல் கிடைக்கும் நாள், அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு கிடைக்கும், தொழில் வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும்.

மீனம்

இன்று தங்களுக்கு தொலைபேசி வழியில் வரும் தகவல் ஆச்சரியம் தரும் விதமாக இருக்கும். பக்குவமாகப்பேசி காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள், உத்தியோகத்தில் இடமாற்றம், இலாகா மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புண்டு.

Exit mobile version