Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று எதிலும் கவனம் தேவை

மேஷம்

இன்று தங்களுக்கு உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள், குடும்ப பிரச்சனையை நல்லதொரு முடிவிற்கு வரும். அடுத்தவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெற்று மகிழ்ச்சியை கொடுக்கும். வரவு திருப்திகரமாக இருக்கும்.

ரிஷபம்

இன்று தங்களுடைய செல்வாக்கு அதிகரிக்கும் நாள், வெகு நாட்களாக வாங்க நினைத்த பொருள் ஒன்றை வாங்கி மகிழ்ச்சியடைவீர்கள். தொலைபேசி வழித்தகவல் ஆச்சரியமளிக்கும் விதமாக இருக்கும். வாங்கிய இடத்தில் வீடு கட்டுவது தொடர்பான சிந்தனை மேலோங்கும்.

மிதுனம்

இன்று தாங்கள் சந்தித்தவர்களால் சந்தோஷம் அதிகரிக்கும் நாள், வழிபாடுகளில் நம்பிக்கை ஏற்படும். நேற்றைய சேமிப்பு இன்று செலவிற்கு கைகொடுக்கும், தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி தரும் விதமாக இருக்கும்.

கடகம்

இன்று தங்களுடைய இல்லத்தில் இனிமையான சம்பவங்கள் நடைபெறும் நாள், குடும்பத்திற்கு தேவைப்படும் பொருட்களை வாங்கி மகிழ்ச்சியடைவீர்கள். வெகுநாட்களாக உங்கள் வீட்டிற்கு வராத உறவினர்கள் இன்று திடீரென்று வருகை தரலாம்.

சிம்மம்

இன்று தங்களுடைய வரவும், செலவும், சமமாக இருக்கும் நாள், வளர்ச்சிக்கு ஆரம்பப் புள்ளியாக இருந்தவர்களின் சந்திப்பு கிடைக்கும். எவ்வாறு நடக்குமோ என நினைத்த காரியம் நல்லபடியாக நடந்தேறும். ஆரோக்கிய குறைவால் உற்சாக குறைபாடு ஏற்படலாம்.

கன்னி

இன்று தங்களுக்கு நண்பர்களால் நல்ல காரியம் நடைபெறும் நாள், வீட்டுப் பராமரிப்புச் செலவு அதிகரிக்கும், மூத்தவர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பதன் மூலமாக பெருமைக வந்து சேரும் வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும்.

துலாம்

இன்று தங்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள், வரவேண்டிய பாக்கிகள் வசூலாகி மகிழ்ச்சியை வழங்கும், தொழில்ரீதியான எடுத்த புது முயற்சி வெற்றி பெறும், உத்தியோகத்தில் பணி நிரந்தரமாவதில் தாமதம் உண்டாகலாம்.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு முன்னேற்றம் அதிகரிக்கும் நாள், நேற்று நடைபெறாத காரியம் இன்று நடைபெற்று மகிழ்ச்சியை கொடுக்கும், தொல்லை கொடுத்தவர்கள் விலகிச்செல்வார்கள், பயணத்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.

தனுசு

இன்று தங்களுக்கு பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும், ஒரு சிறிய தொகையை செலவிட வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம், தெய்வீக சிந்தனை அதிகரிக்கும்.

மகரம்

தைரியமும், தன்னம்பிக்கையும், அதிகரிக்கும் நாள், உடல் நலம் சீராகி உற்சாகத்துடன் பணியாற்றுவீர்கள். தடைபட்ட காரியம் இன்று தானாகவே நடைபெறும், உத்தியோகத்தில் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்காது.

கும்பம்

இன்று தங்களது அருகிலிருப்பவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள், மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் நீங்கும், ஆரோக்யத்தில் அச்சுறுத்தல் தோன்றி மறையும் மற்றவர்களை விமர்சிப்பதால் உறவில் விரிசல் உண்டாகலாம்.

மீனம்

இன்று தங்களுக்கு காலையில் கலகலப்பும், மதியத்திற்கு மேல் சலசலப்பும், உண்டாகும் நாள், அடுக்கடுக்காக பிரச்சனைகள் உண்டாகி அமைதி குறையும். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதத்தில் நடந்து கொள்ள மாட்டார்கள்.

Exit mobile version