நீங்க இந்த ராசிக்காரர்களா? அப்படின்னா இன்னைக்கு ஒரே குஷி தான் போங்க!

0
112

மேஷம்

இன்று தங்களுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு காரணமாக நல்ல காரியம் நடைபெறும் நாள், நிதிநிலை அதிகரிக்கும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும் உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் அனுகூலம் உண்டு.

ரிஷபம்

இன்று தாங்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாள், செலவுகள் அதிகரிக்கலாம், தொழிலில் எதிர்பார்த்த திருப்பங்கள் உண்டாகும் உத்தியோகத்தில் வரவேண்டிய பதவி உயர்வு கைநழுவி செல்வதற்கான வாய்ப்புண்டு.

மிதுனம்

காரிய வெற்றிக்கு கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள், பொறுமையை கடைபிடிப்பது மிகவும் நன்று, அலைச்சலுக்கேற்ற ஆதாயமிருக்காது உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடலாம்.

கடகம்

இன்று தாங்கள் உற்சாகத்துடன் செயல்படும் நாள், உடல் நலம் சீராகும், இரக்கமிக்கவர்களின் உதவி தங்களுக்கு கிடைக்கும் அவர்கள் மூலமாக சில காரியங்கள் முடியும், எதிர்காலத்திற்காக சேமிக்க நினைப்பீர்கள்.

சிம்மம்

தொல்லை கொடுத்தவர்கள் எல்லையை விட்டு விலகிச்செல்லும் நாள், நட்பால் நல்ல காரியம் நடைபெறும். தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம், கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள்.

கன்னி

இன்று தாங்கள் தொட்டது துலங்கும் நாள், துணிவும், தன்னம்பிக்கையும், அதிகரிக்கும். மாற்று கருத்துடையோர் மனம் மாறி கூட்டு முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவர் அரைகுறையாக நின்ற பணிகளை துரிதமாக செய்து முடிப்பீர்கள்.

துலாம்

இன்று தங்களுக்கு இருந்த துன்பங்கள் யாவும் காணாமல் போகும், வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும், வருமானம் திருப்திகரமாக இருக்கும், குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றும் எண்ணம் அதிகரிக்கும் திட்டமிட்டு செலவு செய்வீர்கள்.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு வி ஐ பி வீடு தேடி வரும் நாள், வருமானம் திருப்திகரமாக இருக்கும். தொழில் தொடங்கும் முயற்சிக்கு நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள், குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களுடைய குணமறிந்து நடந்து கொள்வார்கள்.

தனுசு

இன்று தங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள், உத்தியோகத்தில் ஊர்மாற்றம், இடமாற்றம், உள்ளிட்டவை செய்யும் எண்ணம் அதிகரிக்கும். குடும்பத்தில் வெகு நாட்களாக நிலவிவந்த பிரச்சினை நல்லதொரு முடிவிற்கு வரும்.

மகரம்

இன்று தங்களது சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் சுமுகமாக முடிவடையும் நாள். சூழ்நிலைக்கேற்றவாறு உங்களை மாற்றியமைத்துக் கொள்வீர்கள், உத்தியோகத்தில் ஊதிய உயர்வு தொடர்பாக மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும்.

கும்பம்

இன்று தங்களுக்கு தொலைபேசி மூலமாக பொன்னான தகவல் வந்து சேரும் நாள், பொதுவாழ்வில் புகழ் அதிகரிக்கும், பெற்றோர் நலனில் அக்கறை காட்டுவீர்கள், உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து மனக்குழப்பங்களை உண்டாக்கும்.

மீனம்

இல்லத்தில் நல்ல காரியம் நடைபெறும் நாள், நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். நீடித்த நோய் நீங்கிச் செல்லும், குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சினைகள் நல்லதொரு முடிவெடுக்க வரும் சகோதர வகையில் சகாயம் உண்டாகும்.