Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நீங்க இந்த ராசியா? அப்படின்னா இன்னிக்கு பார்த்து செலவு பண்ணுங்க!

மேஷம்

இன்று தங்களுக்கு பொழுது விடியும் பொழுதே பொன்னான தகவல் வந்து சேரும் நாள், வியாபார நலன் கருதி எடுத்த முயற்சிக்கு மாற்றினத்தவர்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் நண்பர்களால் லாபம் கிடைக்கும்.

ரிஷபம்

இன்று தங்களுக்கான வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள், நேற்று பாதியில் நின்ற பணியை இன்று மீண்டும் தொடர்வீர்கள், அருகில் இருந்தவர்களால் வந்த சிக்கல் நீங்கும், ஊதிய உயர்வு தொடர்பான தகவல் வரலாம்.

மிதுனம்

இன்று தங்களுக்கு தடைபட்ட காரியங்கள் தானாகவே நடைபெறும் நாள், வரவு திருப்திகரமாக இருந்தாலும் கூட நண்பர்களுக்காக ஒரு தொகையை செலவிட வேண்டிய சூழ்நிலை ஏற்படும், புதிய உத்தியோகத்திற்கான அழைப்பு வருவதற்கான வாய்ப்புண்டு.

கடகம்

இன்று தங்களுடைய முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள், இடம், பூமியால் லாபம் கிடைக்கும். உள்ளம் மகிழும் சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும், நேற்றைய மனக் கசப்பான சம்பவம் இன்று மாறுவதற்கான வாய்ப்புண்டு பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும்.

சிம்மம்

இன்று தங்கள் அருகிலுள்ளவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள், மதியத்திற்கு மேல் முயற்சி செய்த காரியங்களில் வெற்றி கிடைக்கும், பணப்பொறுப்புகளை மற்றவர்களிடம் யோசித்து ஒப்படைப்பது மிகவும் நன்று.

கன்னி

இன்று தங்களுக்கு செலவுகள் குறைவதற்கு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாள், உத்தியோகத்தில் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்காமல் போகலாம், விலையுயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனத்துடன் செயல்படுவது அவசியம்.

துலாம்

இன்று கொடுத்த வாக்கை செயலாக்கிக் காட்டும் நாள், புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்ச்சியடைவீர்கள். தொழிலில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும், குடியிருக்கும் வீட்டால் உண்டான பிரச்சனை நீங்கும்.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு முன்னேற்றம் அதிகரிக்கும் நாள், முக்கிய பள்ளிகளிலும் துடிப்புடன் தொழில் வளர்ச்சியை காண்பீர்கள், லாபம் எதிர்பார்த்தபடியே இருக்கும் துணையாக இருப்பவர்கள் தோள் கொடுத்து உதவி புரிவார்கள்.

தனுசு

இன்று சகோதரர்களிடமிருந்த சச்சரவுகள் நீங்கும் நாள், தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெறிவது மிகவும் நன்று. பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டு புதிய வாகனங்களை வாங்க வேண்டுமென்ற எண்ணம் அதிகரிக்கும்.

மகரம்

இன்று விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்ச்சியடையும் நாள், சுணக்கத்துடன் இருந்த காரியம் சுறுசுறுப்பாக நடைபெறும், தூரத்து உறவினர்களால் உண்டான தொந்தரவு நீங்கும், உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும்.

கும்பம்

இன்று தங்களுக்கு கருத்து வேறுபாடுகள் நீங்கும் நாள், கவுரவம், புகழ், உள்ளிட்டவை அதிகரிக்கும். உத்தியோக உயர்வு வருவதற்கான அறிகுறிகள் தோன்றலாம், விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்ச்சியடைவீர்கள் தந்தை வழி ஆதரவு கிடைக்கும்.

மீனம்

இன்று தங்களுக்கு வரன்கள் வாயில் தேடி வரும் நாள், வி.ஐ.பி.க்களின் ஒத்துழைப்போடு விரும்பிய காரியம் ஒன்றை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களால் உண்டான உபத்திரவங்கள் நீங்கும்.

Exit mobile version