Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இன்று இந்த ராசிக்காரர்களுக்கு நீண்டநாள் ஆசை நிறைவேறும் நாள்!

மேஷம்

சிவபெருமான் வழிபாட்டில் சிந்தனையை செலுத்த வேண்டிய நாள் ஆதாயம் கிடைக்கும் விதத்தில் பயணங்கள் ஏற்படும், செல்வாக்கு அதிகரிக்கும் திருமண முயற்சி கைகூடி வருவதற்கான அறிகுறிகள் தோன்றுவதற்கான வாய்ப்புண்டு.

ரிஷபம்

கோவில் வழிபாடு காரணமாக, ஆனந்தம் கிடைக்கும் பிரபலங்கள் காரணமாக, சில பிரச்சனைகள் தீர்வுக்கு வரும் வீட்டை அலங்கரித்து பார்ப்பதில் ஆர்வம் அதிகமாகும். உடன்பிறப்புகள் வழியில் நல்லதொரு தகவல் கிடைக்கும்.

மிதுனம்

இன்று வளர்ச்சிகள் அதிகரிக்க வழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டிய நாள். எதிர்பாராத செலவுகள் ஏற்படும் மனக்கசப்பு கொடுக்கும் தகவல் வந்து சேரலாம். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்று, மருத்துவச் செலவுகள் உண்டாகும்.

கடகம்

நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். தாங்கள் எதிர்பார்த்த காரியம் ஒன்று நடைபெறுவதில் தாமதம் உண்டாவதற்கான வாய்ப்புண்டு. வரவு தாராளமாக வந்தாலும் அதற்கேற்ற செலவு இருக்கும்.

சிம்மம்

இன்று மனதில் ஏற்பட்ட ஏற்பட்ட குழப்பங்கள் மறையும் நாள். கனிவாக பேசி காரியங்களை சாதிப்பீர்கள் தனிப்பட்ட வருமானம் தானாகவே இருக்கும். தொழில் பணியாளர்களுடன் உண்டான பனிப்போர் நல்லதொரு முடிவுக்கு வரும்.

கன்னி

இன்று தங்களுடைய பிரச்சனைகள் அனைத்தும் ஒரு முடிவுக்கு வரும் நாள். இடமாற்றம் செய்வது தொடர்பாக சிந்தனை மேலோங்கும். பொது நிகழ்வில் பங்கேற்பதற்க்கான வாய்ப்புண்டு விரும்பிய பொருட்களை வாங்க அதிக அலைச்சல் உண்டாகலாம். கூட்டாளிகளிடம் கொடுத்த பொறுப்பு நல்லவிதமாக முடிவடையும்.

துலாம்

கோவில் வழிபாடு காரணமாக, அமைதியான நிலையை அடைய வேண்டிய நாள். பொது வாழ்க்கையில் புகழ் கூடும் போட்டிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள். சங்கிலித் தொடர் போல வந்த கடன் சுமை குறையும் ஆரோக்கியம் சீராவதற்கான வாய்ப்புண்டு.

விருச்சிகம்

லாபங்கள் அதிகரிக்க சிவபெருமானை வழிபட வேண்டிய நாள். ஆதாயம் கிடைக்கும் தகவல் அதிகாலையிலேயே வந்து சேரலாம். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு ஏற்படும். ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

தனுசு

ஆலய வழிபாட்டால் அனுகூலம் காண வேண்டிய நாள். தொழில் தொடர்பான சில அனுபவசாலிகள் சந்திக்கும் சூழ்நிலை ஏற்படும். சுபநிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றில் பங்கேற்றுக்கொள்ள அழைப்புகள் வரலாம்.

மகரம்

மகிழ்ச்சிகரமான செய்தி வரும் நாள். இழுபறியான காரியங்கள் நல்லபடியாக முடிவடையும். நேற்றைய பிரச்சினை இன்று நல்லதொரு முடிவுக்கு வரும் வியாபார நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றியடையும்.

கும்பம்

தெய்வ வழிபாட்டால் இனிமை காண வேண்டிய நாள். சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாவதற்கான அறிகுறிகள் ஏற்படும். மங்கல ஓசை வீட்டில் கேட்ப்பதற்கான வழி உண்டாகும். சேமிப்பில் அக்கறை காட்டுவீர்கள்.

மீனம்

இன்று உங்கள் திறமை வெளிப்படும் நாள் நீண்டநாள் எண்ணம் நிறைவேறும் விருந்து விழாக்களில் பங்கேற்று கொள்வீர்கள். தனிப்பட்ட வருமானம் தானாகவே வரும் கட்டிட பணிகள் உண்டான தொய்வு நிலை மாற்றமடையும்.

Exit mobile version