Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இன்று இந்த ராசிக்காரர்கள் பொறுமையை கடைப்பிடிப்பது அவசியம்!

மேஷம்

இன்று தங்களுக்கு தடைகள் யாவும் அகலும் நாள்,பண வரவு கிடைக்கும், தைரியத்துடன் செயல்பட்டு சாதனை படைப்பீர்கள். நண்பர்கள் சரியான சமயத்தில் கை கொடுத்து உதவி புரிவார்கள். உள்ளம் மகிழும் செய்தியொன்றை உறவினர்கள் மூலமாக கேட்க பெறலாம்.

ரிஷபம்

இன்று தங்களுக்கு அதிகார பதவிகளில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும் நாள், எதிர்காலம் இனிமையாக திட்டங்களை தீட்டுவீர்கள், அரசு வழி சலுகை எதிர்பார்த்தபடி கிடைக்கும் எதிர்பார்த்த பணவரவு வந்து சேரும்.

மிதுனம்

இன்று தங்களுக்கு புதிய பாதை பலப்படும் நாள், முயற்சியில் வெற்றி கிடைக்கும் தொழிலில் இருந்து வந்த மறைமுக போட்டிகள் நீங்கும், சமூக நலப்பணிகளில் நாட்டம் அதிகரிக்கும், ஆரோக்கியம் சீராகும்.

கடகம்

இன்று தங்களுக்கு அன்பான நண்பர்களின் ஆதரவு அதிகரிக்கும் நாள், வாரிசுகளின் வளர்ச்சியை கண்டு பெருமைப்படுவீர்கள். வெளி வட்டார பழக்கவழக்கம் சிறப்பாக இருக்கும், நூதன பொருட்களின் சேர்க்கை கிடைக்கும்.

சிம்மம்

இன்று தங்களுக்கு யோகமான நாள், நம்பிக்கையோடு செயல்படுவீர்கள் எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். பொன் பொருள் வாங்க வகுத்த திட்டம் நிறைவேறலாம், பண விவகாரங்களில் நாணயத்தை காப்பாற்றுவீர்கள்.

கன்னி

இன்று தங்களுக்கு தொட்ட காரியம் தொடங்கும் நாள், தொழில் வளர்ச்சிக்கு முக்கிய புள்ளிகளை சந்திப்பீர்கள், விலகிச் சென்ற வரன்கள் மீண்டும் வந்து சேரும், வீடு வாங்கும் முயற்சியில் ஆர்வம் அதிகரிக்கும்.

துலாம்

இன்று தங்களுக்கு பிரபலமானவர்களால் பிரச்சனை முடிவுக்கு வரும் நாள் வருமானம் வரும் வழியை கண்டு கொள்வீர்கள். தடைப்பட்ட ஒப்பந்தம் தானாக வந்து, சேரும் வீட்டு உபயோக பொருட்களை வாங்கி மகிழ்ச்சியடையும் வாய்ப்புண்டு.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு நினைத்தது நிறைவேறும் நாள், சகோதரர்களால் நன்மை ஏற்படும், சரியான சமயத்தில் மற்றவருக்கு உதவுவதால் அவருடைய அன்பை பெறுவீர்கள், வாரிசுகளின் சுப காரியப் பேச்சுக்கள் முடிவாகலாம்.

தனுசு

இன்று தங்களுடைய மனக்குழப்பம் நீங்கும் நாள், மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவார்கள், முக்கிய முடிவெடுக்கும் பொழுது குடும்ப உறுப்பினர்களிடம் கலந்தாலோசிப்பது நல்லது, விலகிச் சென்ற சொந்தங்கள் மீண்டும் திரும்பி வந்திணைவார்கள்.

மகரம்

இன்று தங்களுக்கு நிம்மதி குறையும் நாள், நினைத்ததை செய்ய முடியாது, பண தேவைகள் கடைசி சமயத்தில் பூர்த்தியாகும், பக்குவமாக பேசி காரியங்களை சாதித்துக் கொள்ளும் சூழ்நிலை ஏற்படும்.

கும்பம்

இன்று தங்களுக்கு அதிகாலையிலேயே கலகலப்பும், மாலையில் சலசலப்பும், உண்டாகும் நாள், அருகில் இருப்பவர்களால் ஒரு சில தொல்லைகள் வந்து சேரலாம், உறவினர் பணம் கேட்டு நர்ச்சேரிப்பார்கள், தொழில் மாற்ற சிந்தனை அதிகரிக்கும்.

மீனம்

இன்று தாங்கள் பொறுமையை கடைபிடித்து பெருமை காண வேண்டிய நாள், பயணத்தால் அலைச்சல் உண்டானாலும் ஆதாயம் கிடைக்கும், வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சியில் ஆர்வம் அதிகரிக்கும்.

Exit mobile version