Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று கடன் சுமை அதிகரிக்கும்!

மேஷம்

இன்று தங்களுக்கு முன்னேற்றம் ஏற்படும் நாள், அதிகார பதவியில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும், உடல் நலனில் அக்கரை செலுத்துவது நல்லது, சில சமயங்களில் நீங்கள் விட்டுக் கொடுத்து செல்வது மிகவும் நன்று.

ரிஷபம்

இன்று தங்களுக்கு யோகமான நாள், பிரியமானவர்களுடன் உண்டான பிரச்சனை நீங்கும், அலைச்சலுக்கு ஏற்ற ஆதாயம் கிடைக்கும், குடும்ப அமைதிக்காக வழிபாடுகளை செய்வீர்கள், கேட்ட இடத்தில் உதவி உடனடியாக கிடைக்கும்.

மிதுனம்

இன்று தங்களுக்கு நெருக்கடி நிலை நீங்கும் நாள், வாய்ப்புகள் வாயில் தேடி வரும், மக்கள் செல்வங்கள் காரணமாக உண்டான தொந்தரவு நீங்கும் இழப்புகளை ஈடு செய்வதற்கு எடுத்த முயற்சி வெற்றி பெறும், நண்பர்கள் மூலமாக நல்ல தகவல் வந்து சேரும்.

கடகம்

இன்று தங்களுக்கு ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும் நாள், விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். அனுபவமிக்கவர்களின் ஆலோசனைகள் சரியான சமயத்தில் கைகொடுத்து உதவும், வீடு மாற்றம் தொடர்பாக சிந்திப்பீர்கள்.

சிம்மம்

இன்று தங்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும் நாள், பண வரவு வந்தாலும் செலவுகள் அதிகரிக்கும், முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது, உத்தியோகத்தில் அருகிலிருப்பவர்களின் பகை அதிகரிக்கும்.

கன்னி

இன்று தங்களுக்கு தடைகள் யாவும் நீங்கும் நாள், பணவரவு திருப்திகரமாக இருக்கும், நண்பர்களிடையே மோதலை தவிர்ப்பது நன்று, விலையுயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டு, வியாபார விருத்திக்கு புதிய கூட்டாளிகள் வந்திணைவார்கள்.

துலாம்

இன்று வாரிசுகளின் எதிர்கால நலம் கருதி எடுத்து முயற்சி வெற்றி பெறும், புதிய மனிதர்களின் அறிமுகம் காரணமாக, பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும், அருகிலிருப்பவர்களால் உண்டான சிக்கல் நீங்கும்.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு வருமானம் வாயில் தேடி வரும் நாள், கோவில் வழிபாடுகளில் மனதின் ஓட்டம் செல்லும். நேற்றைய கனவு இன்று பலிதமாகும், உங்களுடைய சுதந்திர போக்கிற்கு இருந்த குறுக்கீடுகள் நீங்கும்.

தனுசு

இன்று தங்களுடைய எதிரிகளின் பலம் அதிகரிக்கும் நாள், நேற்று எடுத்த முடிவை இன்று மாற்றிக் கொள்வதற்கான சூழ்நிலை ஏற்படும். பொது வாழ்வில் பிரச்சனைகள் உண்டாகும், உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் சிறிய கருத்து முரண்பாடுகள் வந்து நீங்கும்.

மகரம்

இன்று தங்களுக்கு சந்தோஷம் அதிகரிக்கும் நாள், வீடு வாங்கும் முயற்சி கைகூடும், பணத்திற்காக செய்திருந்த ஏற்பாடுகள் பலன் கொடுக்கும், பிரிந்து சென்ற நண்பர்கள் வந்தினையும் வாய்ப்புண்டு, கோபத்தை குறைத்துக் கொள்வது மிகவும் நன்று.

கும்பம்

இன்று தங்களுடைய நிம்மதி குறையும் நாள், வரவை விட செலவுகள் அதிகரிக்கும், உத்தியோகத்தில் சக ஊழியர்களால் தொந்தரவு ஏற்படும், உடல் நலன் சீராக மாற்று மருத்துவத்தை மேற்கொள்வது நல்லது, யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.

மீனம்

இன்று தங்களுக்கு கவலைகள் தீர கடவுள் வழிப்பாட்டை மேற்கொள்ளவேண்டிய நாள், கடன்சுமை அதிகரிக்கும்,மாமன்,மைத்துனர், வழியில் மனக்கசப்பு ஏற்படும் வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படலாம்.

Exit mobile version