Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

23-7-2022- இன்றைய ராசி பலன்கள்!

மேஷம்

இன்று தங்களுக்கு நம்பிக்கைகள் யாவும் நடைபெறும் நாள், வருமானம் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகம் ரீதியாக இடமாற்றம், உறவினர்கள் வழியில் அன்பு தொல்லைகள், உள்ளிட்டவை அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்ச்சியடைவீர்கள்.

ரிஷபம்

இன்று தங்களுடைய மனதில் நினைத்த காரியம் அடுத்த நொடியே செயலாகும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்ச்சியடைவீர்கள், தொழில் தொடர்பாக எடுத்த முயற்சிக்கு செல்வந்தர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

மிதுனம்

இன்று தாங்கள் வாக்கு சாதுரியம் காரணமாக, வளம் காணும் நாள். அலுவலகப் பணிகளில் அருகில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது மிகவும் நன்று, தெய்வீக சிந்தனை அதிகரிக்கும், புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

கடகம்

இன்று தாங்கள் யோசனை செய்தும், இறைவனை பூஜை செய்தும், செயல்பட வேண்டிய நாள். தொழில் குறித்து எடுக்கும் முடிவுகளை ஓரிரு நாட்கள் தள்ளி வைக்க நேரலாம், செலவுகள் அதிகரிக்கும் நட்பு பகையாகலாம்.

சிம்மம்

இன்று தங்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள், அடுத்தவர்களுக்காக எடுத்த முயற்சியில் அலைச்சல் உண்டானாலும் ஆதாயம் கிடைக்கும், உத்தியோகத்தில் உயரதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.

கன்னி

இன்று தங்கள் சிக்கனத்தை கடைபிடித்து சிறப்புகளை காண வேண்டிய நாள், சொந்த பந்தங்கள் குறித்த சில விஷயங்களை விட்டுக்கொடுத்து செல்வது நல்லது, மருத்துவ செலவுகள் ஏற்படும்.

துலாம்

இன்று விடியல் காலையிலேயே விரயம் உண்டாகும் நாள், தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பது நல்லது. ஒவ்வாத உணவுகளை கொண்டதன் மூலமாக உடல்நல பாதிப்புகள் உண்டாகலாம்.

விருச்சிகம்

இன்று தாங்கள் தொட்ட காரியங்கள் துளிர்விடும் நாள், புதிய வாகனம் வாங்க எடுத்த முயற்சி கைகூடலாம். பெற்றோர்கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள், தொழில் குறித்து புகழ்மிக்கவர்களை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைக்கும்.

தனுசு

இன்று தாங்கள் வம்பு வழக்குகளை சமாளித்து வளம் காண வேண்டிய நாள். வெளிவட்டார தொடர்பு அதிகரிக்கும், சகோதர வழியில் சுப செய்தியொன்று வந்து சேரலாம், வீட்டை சீரமைக்கும் பணியில் ஆர்வம் அதிகரிக்கும்.

மகரம்

இன்று தாங்கள் உற்சாகத்துடன் செயல்பட வேண்டிய நாள், மனதளவில் நினைத்த காரியம் ஒன்றை செயல்படுத்த முன் வருவீர்கள், ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும், விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்ச்சியடையும் வாய்ப்பு கிடைக்கும்.

கும்பம்

இன்று தங்கள் விவாதங்களில் வெற்றி பெறும் நாள், இடம் வீடு வாங்குவது தொடர்பாக சிந்திப்பீர்கள் மாமன், மைத்துனர், வழியில் மகத்தான ஒத்துழைப்பு கிடைக்கும் வாரிசுகளின் கல்விக்காக எடுத்த முயற்சி கைக்கூடும்

மீனம்

இன்று சேமிப்பு கரையும் நாள், எதையும் யோசித்து முடிவெடுப்பது நல்லது, அடுத்தவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வந்து சேரலாம், கொடுத்த வாக்குறுதியை கடைசி சமயத்தில் காப்பாற்றுவீர்கள்.

Exit mobile version