Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

26-7-2022-இன்றைய ராசிபலன்

மேஷம்

இன்று தங்களுக்கு தேவைக்கேற்ற பணம் வீடு தேடி வரும் நாள். எதிர்ப்பார்த்தபடியே தொழில் முன்னேற்றப்பாதையை நோக்கிச்செல்லும். கடந்த சில நாட்களாக தாமதப்பட்டு வந்த காரியம் என்று துரிதமாக முடிவடையும்.

ரிஷபம்

இன்று தங்களுக்கு நட்பால் நன்மைகள் நடைபெறும் நாள். வியாபாரப் போட்டிகளை சமாளிக்கும் ஆற்றல் ஏற்படும், உடன்பிறப்புகள் வழியில் ஒரு சுப செய்தி வந்து சேரலாம், மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவார்கள்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள், வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வது உங்களுடைய புத்திசாலித்தனமாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும்.

கடகம்

இன்று தங்களுக்கு தடைப்பட்ட காரியம் தானாக நடைபெறும் நாள், பயணங்களால் பலன் கிடைக்கும், பண தேவைகள் கடைசி சமயத்தில் பூர்த்தியாகலாம், ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை.

சிம்மம்

இன்று ஒப்பந்தங்களில் கையெழுத்து போட்டு மகிழ்ச்சியடைவீர்கள் பொருளாதார நிலை அதிகரிக்கும். அருகில் இருப்பவர்கள் பக்கபலமாக இருப்பார்கள், உத்தியோகத்தில் பதவி உயர்வு வருவதற்கான அறிகுறிகள் தோன்றலாம்.

கன்னி

இன்று தங்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் மாறும் நாள், மணக்குழப்பம் நீங்கும் கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்க முன் வருவீர்கள் வருமானம் திருப்திகரமாக இருக்கும்.

துலாம்

இன்று தங்களுக்கு புது முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள், தொழில் பங்குதாரர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது மிகவும் நன்று. குடும்பத்தில் பெரியவர்கள் உங்களின் செயல்பாடுகளில் குறை கண்டுபிடிக்கலாம்.

விருச்சிகம்

இன்று தாங்கள் விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள், விடையற்காலையிலேயே விரயம் ஏற்படும். இடமாற்றம் செய்யலாமா என்று சிந்திப்பீர்கள். தன்னம்பிக்கையை தவற விட வேண்டாம், உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும்.

தனுசு

இன்று தங்களுக்கு எடுத்த முயற்சி உடனடியாக கைகூடும் நாள். முன்னேற்ற பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரலாம், பூமி யோகம் உண்டு, முக்கிய பள்ளிகள் உங்களுடைய முன்னேற்றத்திற்கு வழிகாட்டுவார்கள்.

மகரம்

இன்று தங்களுடைய எண்ணங்கள் யாவும் நிறைவேறும் நாள், உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். நாணயமும், நேர்மையும், கொண்ட நண்பர்களால் நம்பிக்கைகள் நடைபெறும் வெளியுலக தொடர்புகள் விரிவடையும்.

கும்பம்

இன்று தங்களுக்கு ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள், அரைகுறையாக சில வேலைகள் இருக்கலாம். கைமாற்றாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கலாம், உத்தியோகமாற்றம் தொடர்பான சிந்தனை ஏற்படும்.

மீனம்

இன்று தங்களுக்கு பொது வாழ்வில் புகழ் அதிகரிக்கும் நாள், புகழ்மிக்கவர்கள் தேவையான உதவியை செய்வார்கள் தொழில் வளர்ச்சி ஏற்படும். பூர்வீக சொத்தை விற்று புதிய சொத்துக்களை வாங்கி சேர்க்கும் எண்ணம் அதிகரிக்கும்.

Exit mobile version