2-8-2022- இன்றைய ராசி பலன்கள்

0
164

மேஷம்

இன்று தங்களுக்கு முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள், உயர்ந்த மனிதர்களின் சந்திப்பு உறுதுணையாக இருக்கும், வாரிசுகள் வழியில் சுபகாரிய பேச்சுக்கள் முடிவாகும். சொத்துக்களில் உண்டான பிரச்சனைகள் நீங்கும்.

ரிஷபம்

இன்று தாங்கள் வழிபாடு காரணமாக, வளர்ச்சி காண வேண்டிய நாள். வாகனத்தை புதுப்பிக்கும் எண்ணம் அதிகரிக்கும், நண்பர்கள் சரியான சமயத்தில் கைகொடுத்து உதவி புரிவார்கள், வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும்.

மிதுனம்

இன்று தங்களுக்கு சந்தோஷமான நாள், சகோதர வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கலாம். குடும்ப முன்னேற்றம் கருதி புதிய திட்டமொன்றை வகுப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

கடகம்

இன்று தங்களுக்கு உள்ளம் மகிழும் சம்பவமொன்று இல்லத்தில் நடைபெறும் நாள். குடும்பத்திற்கு தேவைப்படும் பொருட்களை வாங்கி மகிழ்ச்சியடைவீர்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் நீங்கும்.

சிம்மம்

இன்று தங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள், பரிமாற்றத்திலிருந்து வந்த சிக்கல்கள் நீங்கும் ஆற்றல் மிக்கவர்கள் ஒத்துழைப்பு காரணமாக, தொழில் முன்னேற்றமடையும் பணவரவு தாராளமாக இருக்கும்.

கன்னி

இன்று தங்களுக்கு தெய்வீக சிந்தனை அதிகரிக்கும் நாள், கடின முயற்சிக்குப் பிறகு காரியங்களில் வெற்றி கிடைக்கும். அலைபேசியின் மூலமாக நல்ல தகவல் வந்து சேரும். உத்தியோகத்தில் உங்களுடைய கருத்துக்கு ஆதரவு கிடைக்கும்.

துலாம்

இன்று தாங்கள் ஆனந்தமான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக் கொள்ளும் நாள். இனிமையான அனுபவங்கள் உண்டாகும், உங்களுடைய திறமையான செயல்பாடுகளை கண்டு அடுத்தவர்கள் வியப்படைவார்கள்.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு அன்பான நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து உறவினர்களும், நண்பர்களும், கை கொடுத்து உதவி புரிவார்கள். உத்தியோகத்தில் உங்களுடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

தனுசு

இன்று தங்களுக்கு விருப்பங்கள் யாவும் நிறைவேறும் நாள் பணப்பற்றாக்குறை நீங்கும். தாமதமாக சிலர் வேலைகளை செய்ய தொடங்கினாலும் சரியான நேரத்திற்கு முடித்து வைப்பீர்கள் உத்தியோகத்தில் மரியாதை அதிகரிக்கும்.

மகரம்

இன்று தங்களுக்கு எதிர்கால முன்னேற்றம் தொடர்பாக எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள், வெளிவட்டார பழக்க வழக்கங்கள் விரிவடையும். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும் விதமாக இருக்கும் வரன்கள் வாயிற்கதவைத் தட்டும்.

கும்பம்

இன்று தாங்கள் தெய்வ வழிபாட்டால் திருப்தி காண வேண்டிய நாள், அதிக விலை கொடுத்து சில பொருட்களை வாங்கியும் திருப்தியின்றி போவதற்கான வாய்ப்புண்டு. செய்தொழிலில் வேலையாட்களால் பிரச்சனைகள் உண்டாகும்.

மீனம்

இன்று தங்களுக்கு நட்பு பகையாகும் நாள், மாலை நேரத்திற்கு பிறகு மன குழப்பம் அதிகரிக்கும். விரயம், ஏற்படும் விலையுயர்ந்த பொருட்களை கையாள்வதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் பணி மாற்றம் தொடர்பான தகவல் கிடைக்கும்.