Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உங்கள் ஜாதகம் எப்படியுள்ளது?

ஒரு குழந்தை ஜனனம் எடுக்கும்போது வான் மண்டலத்தில் உள்ள கிரகங்களில் சில கிரகங்கள் வலிமையாக இருக்கலாம், சில கிரகங்கள் வலிமையற்று இருக்கலாம், லக்ன ரீதியான அசுப கிரகம் வலிமையாக இருந்தால் அதைப்பற்றி எந்தவித கவலையும் பட தேவையில்லை.

அதே சமயத்தில் லக்ன ரீதியாக சுபக்கிரகம் எனில் அதன் தசா புக்தி காலங்களில் நற்பலன்களை அனுபவிக்க முடியாமல் போய்விடுவதற்கான வாய்ப்புண்டு.

வலிமையற்ற கிரகத்தை பலப்படுத்த பல்வேறு பூஜைகள், பரிகார முறைகள், ஜோதிட சாஸ்திரத்தில் பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும் பரிகாரம் குறுகிய காலத்திற்கு மட்டுமே பலன்களைக் கொடுக்கும்.

ஆனாலும் நிரந்தர பலனைக் கொடுப்பதில் எண்கணித பெயர்கள் என்றால் அது மிகப்பெரும் அதிர்ஷ்ட பெயரை மட்டும் அமைத்துக் கொண்டால் 25% மட்டுமே பலன் கிடைக்கும். அந்த நல்ல பெயரை ஜாதகம் பார்த்து பிறந்த எண் விதி, எண், இவற்றுடன் ஒப்பிட்டு ஒருவருடைய ஜாதகத்தில் யோகத்தை வழங்கக்கூடிய எண்ணில் பெயரை வைத்துக் கொண்டால் வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும்.

ஒருவருக்கு பெயர் எண் அதிர்ஷ்டத்தை கொடுப்பதும் துரதஷ்டத்தை கொடுப்பதும், அவரவர் கர்மவினை தான் காரணம் இந்த முறையில் பெயர் அமையவில்லையா? எண்ணுக்குரிய வழிபாட்டு முறையை கடைபிடித்தால் வெற்றி கிடைக்கும்.

பலர் ஜோதிடத்தையும், எண்ணியலையும், பிரித்துப் பார்க்கிறார்கள் அது தவறு, ஒருவருக்கு சுய ஜாதகத்தை மீறிய நற்பலன்கள் கிடைக்கும் வாய்ப்புகள் குறைவுதான்.

பிறவி எண், விதி எண், இவற்றுடன் ஒருவருடைய ஜாதக ரீதியான யோகத்தை கொடுக்ககூடிய கிரகத்தின் எண்ணில் பெயரை அமைத்துக் கொண்டால் பலன் நூறு சதவீதம் உறுதி என்கிறார்கள்.

விதி எண், பிறவி எண், இவற்றுடன் ஜாதகத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து அந்த ஜாதகப்படி எந்த கிரகம் நன்மை கொடுக்கும் என்பதை ஆய்வு செய்து அந்த கிரகத்திற்குரிய எண், பிறந்த தேதி எண்ணுக்கு பொருத்தமாக உள்ளதா? என்பதை ஆராய்ந்து அதற்கு பொருத்தமான எண்ணில் பெயரை அமைப்பதே மிகவும் நல்ல முறையாகும்.

ஜாதகத்தில் வலிமை பெற்ற கிரகத்தின் எண்ணை அல்லது அதன் நட்பு எண்ணின் அடிப்படையில் பெயர் வைக்கும் போது நற்பலன்கள் கிடைக்கும். இப்படி தேர்வு செய்யும் எண் ஜாதகரின் சுய ஜாதக ரீதியாக அசுபராக உள்ள கிரகத்தின் எண்ணின் பெயராக இருக்கக் கூடாது.

ஒருவரின் ஜாதகத்தில் பலமாக உள்ள கிரகம் வாழ்நாள் முழுவதும் ஜாதகத்தை இயக்கும் அதே கிரகம் லக்னம் ரீதியாக சுபர் என்றால் ஜாதகருக்கு சுபபலன்கள் மிகுந்து கொண்டே இருக்கும்.

Exit mobile version