Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சினிமா என்ற வார்த்தை இவன் வாழ்வில் இல்லை என அடித்துச் சொன்ன ஜோதிடம்! பொய்யாக்கிய பிரபலம்

#image_title

நாம் எத்தனையோ ஜோதிட சாஸ்திரங்களை நம்பி இருக்கிறோம்.. இன்றும் நம்பப்படுகிறது

அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் வாழ்வில் அது பொய்யானது என்று சொன்னால் மிகை ஆகாது.

 

ஒருவர் வாழ்வில் அல்ல நிறைய பேர்களின் வாழ்வில் ஜோதிடம் பொய்யாகி இருக்கிறது. அவர்களது உறுதியான நெஞ்சமும், விதியை வெல்லும் மதியும் இருப்பதால்தான் இன்றும் ஜோதிடத்தை தாண்டி வெற்றி கொடி நாட்டி வருகிறார்கள்.

 

சிலப்பதிகாரம் எழுதிய (இளங்கோவடிகள் ) இளங்கோ இளவரசன்

அரச சபையில் இருந்தபோது, ஒரு ஜோதிடர் கணித்த கணிப்பு இது. “நான் சொல்வதை நீங்கள் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இவன் ஜாதகப்படி, இவனின் தமயனாகிய செங்குட்டுவன் இருக்க இவனே ( இளங்கோ இளவரசன் ) நாட்டை ஆள்வான் .

 

“நான் சொல்வதை நீங்கள் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.இந்த ஜோதிடர் கணித்த கணிப்பை (ஜோதிடத்தை )நான் பொய்யாக்கிக் காட்டுகிறேன்.அதற்காக நான் இன்றே துறவறம் நோக்கி புறப்படுகின்றேன் ”

என்று துறவறம் பூண்டார் . இளங்கோவடிகள்.

 

அப்படி இந்த சிறுவன் உடைய தாயார் ஜோதிடத்தை பார்த்த பொழுது,” முடியவே முடியாது இந்தப் பையனுக்கு சினிமா வாழ்க்கையே இல்லை ” என அடித்து கூறுகிறார் அந்த ஜோதிடன்

 

நான் சொல்வதை வேண்டுமென்றால் நீங்கள் எழுதி வைத்துக் கொள்ளுங்கள் சினிமா வாழ்க்கைக்கு இவன் போக முடியாது. என அந்த ஜோதிடன் கூறுகிறான்.

 

இந்த ஜோதிடத்தை பார்த்த அந்த சிறுவனின் தாய்க்கு மிகவும் கவலையாக இருக்கிறது. இவன் ஒற்றைக்காலில் சினிமாவில் போவேன் என்று நினைக்கிறான். ஆனால் இந்த ஜோதிடனோ சினிமாவுக்கு போகமாட்டேன் என்று சொல்கிறானே என்று மிகவும் வருத்தம் அடைந்தார்.

 

ஜோதிடர் சொன்ன எதிர்மறையான கருத்தைக் கேட்டு அந்தப் பையன் வருத்தம் அடையவில்லை ஒரு வைராக்கியத்தை நெஞ்சில் பதித்துக் கொண்டான்;

 

“ஜோதிடர் அய்யா, நல்லா கேட்டுக்கோங்க. உங்கள் ஜோதிடத்தை நான் பொய்யாக்கிக் காட்டுகிறேன். சினிமாவில் நிச்சயமாக ஜெயித்து காட்டுகிறேன். உங்கள் கணிப்பு தப்பு என்பதை கட்டாயம் நிரூபிப்பேன்.” என சவால் விடுகிறான்.

 

மிகவும் போராடி தன் திறமையை வளர்த்துக் கொண்டு ஜோதிடத்தின் கணிப்பு தப்பு என்று நிரூபிக்க சினிமாவில் கால் பதிக்கிறான் அந்த சிறுவன்.

 

அந்த சிறுவன் தான் பின்னாளில் தனக்கென தனித்திரையை பதித்த பி பி ஸ்ரீநிவாஸ். அவர் பாடல்களை கேட்க இனிமையின் உச்சத்திற்கே நாம் சென்று விடலாம்.

 

“காலங்களில் அவள் வசந்தம்” என்ற பாடலே ஒரு சாட்சி.

 

எத்தனையோ பாடல்கள் அவரின் இனிமையான குரலில் நாம் கேட்டிருக்கிறோம். அப்படி ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாமல் இல்லை. அவர் அவர் மீது கொண்ட நம்பிக்கையால் சினிமாவில் கொடி கட்டி பறந்திருக்கிறார்.

 

அந்த காலத்தில் டிஎம்எஸ் இருந்தாலும் இவருக்கென ஒரு தனி பாணியை கொண்டு வலம் வந்தார்.

Exit mobile version