Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பணமழை தான் போங்க!

மேஷம்

இன்று நீங்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். பிள்ளைகளின் நலனில் அக்கறை செலுத்துவீர்கள் வாழ்க்கை தரம் உயர வழி செய்து கொள்வீர்கள். தொழில் மாற்றம் செய்ய புதிய முயற்சிகளை முன்னெடுப்பீர்கள்

ரிஷபம்

இன்று உங்களுடைய பொருளாதார நிலை உயரும் நாள். வழக்குகள் நல்லதொரு முடிவுக்கு வரும், காலத்தில் புதிய எண்ணங்கள் தோன்றும் இளைய சகோதரத்தின் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் நண்பர்கள் காரணமாக, நன்மை உண்டு.

மிதுனம்

பெற்றோர்கள் உறவில் பிரியம் அதிகரிக்கும் நாள். நண்பர்கள் நல்லதொரு தகவலை வழங்குவார்கள் வாகனத்தை பராமரிக்கும் எண்ணம் அதிகரிக்கும் உடன் பணிபுரிபவர்கள் காரணமாக, உண்டான தொந்தரவுகள் அகலும்.

கடகம்

தங்களுக்குள்ளிருக்கும் திறமை திடீரென்று வெளிப்படும் நாள். மருத்துவச் செலவுகள் குறைந்து மன நிம்மதியை வழங்கும் தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி கைகூடும் பழைய கடனை அடைப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

சிம்மம்

விரயங்கள் அதிகரிக்கும் நாள், குடும்ப உறுப்பினர்களிடம் கோபமாக பேசிவிட்டு அதன் பிறகு வருத்தத்திற்குள்ளாவீர்கள். பணிமாற்றம் உண்டாகலாம் தொலைபேசி வழித் தகவல் தொல்லை தருவதாக இருக்கும்.

கன்னி

கொடுக்கல், வாங்கல் ஒழுங்காகும் நாள். நினைத்த காரியத்தை நல்ல விதத்தில் முடிப்பீர்கள் உடல்நலனில் கவனம் செலுத்துவது நல்லது. குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்லாமலிருப்பது மிகவும் நன்று.

துலாம்

இன்று எதிலும் பக்குவமாக பேசி பாராட்டுக்களை பெற்றுக் கொள்வீர்கள். உத்தியோக முன்னேற்றம் காரணமாக, ஊர் மாற்றம் செய்யும் எண்ணம் அதிகரிக்கும் குடும்பத்தில் எல்லோரையும் அனுசரித்து செல்வது நல்லது.

விருச்சிகம்

வாய் வாக்கை செயலாக்கிக் காட்டுவீர்கள். தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சியைத் தரும் சொத்துக்களால் லாபம் கிடைக்கும் தொழில் முன்னேற்றம் கருதி பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.

தனுசு

இனிமையான சம்பவங்கள் நடைபெறும் நாள். தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சியைக் கொடுக்கும் பெரிய மனிதர்களின் சந்திப்பு பெருமை சேர்க்கும். குடும்பத்தினர்கள் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

மகரம்

காலையிலேயே சலசலப்பு ஏற்படும் ஆனால் ஆனால் சந்தோஷம் அதிகரிக்கும் நாள். தந்தைவழியில் உண்டான விரிசல் அகலும் ஆரோக்கியம் சீராகும் கரைந்த சேமிப்புகளை சரிக்கட்டும் எண்ணம் ஏற்படும்.

கும்பம்

வருமானம் திருப்தி தரும் நாள். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்து நின்றார்கள் வாழ்க்கைத் துணை வழியே மகிழ்ச்சி ஏற்படும் செய்தி ஒன்று வந்து சேரும் நீண்டநாள் எண்ணம் நிறைவேறும்.

மீனம்

அருகிலுள்ளவர்களால் நன்மை ஏற்படும் நாள். ஆடம்பரப் பொருட்களை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் அதிகரிக்கும், பயணம் பலன் தரும் பழைய பாக்கிகள் வசூலாகி பண வரவை அதிகரிக்கும்.

Exit mobile version