Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அசுர வேகத்தில் வளர்ந்து வரும் அசுரன் பட ஹீரோ!

தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அவரது ரசிகர்களிடம் அதிகளவில் உள்ளது.இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் 44 மற்றும் பாலிவுட் திரைப்படம் ஒன்றும் இவர் கைவசம் உள்ளது.

அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் என்ற படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். அப்படத்தின் வேலைகளும் இறுதிகட்டத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதோடு மட்டுமல்லாமல் தனுஷின் 42ஆவது படமான அத்ராங்கி ரே பாலிவுட்டில் காட்சிகள் அமைக்கப் பெற்று வருகிறது. இப்படத்திற்கான முதற்கட்ட ஷூட்டிங் வாரணாசியில் நடைபெற்றிருந்த நிலையில் கருணாவின் பாதிப்பால் அடுத்த கட்ட ஷூட்டிங் நிலுவையில் உள்ளது. இப்படத்தில் தனுஷுடன் அக்ஷய் குமார் மற்றும் சாரா அலி கான் ஆகியோர்இப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.

இந்நிலையில் தமிழில் ஒரு வருடத்திற்கு முன்பு வெளியான கோமாளி திரைப்படம் பெரும் வரவேற்பை மக்களிடம் பெற்றது. அப்படத்தின் இயக்குனரான பிரதீப் ரங்கநாதன் தனுஷ் அவர்கள் கூட்டணி அமைக்கப் போவதாக தகவல் பரவியுள்ளது.

 

பிரதீப் ரங்கநாதனின் இயக்கத்தில் வெளியான கோமாளி திரைப்படம் ஒரு வித்தியாசமான கதை களத்தில் உருவாகியிருந்தது. எனவே அது பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆனது. இந்த படத்திற்காக இயக்குனர் பிரதீப் பல பாராட்டுகளை குவித்து இருந்த நிலையில் நடிகர் தனுஷ் அவரை அழைத்து தனக்குத் தகுந்த கதை ஏதாவது இருக்கிறதா என்று கேட்டுள்ளார். எனவே அவர்கள் விரைவில் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது ஆனால் இதுபற்றி எந்த அதிகாரபூர்வமான தகவல்களும் வெளியாகவில்லை. 

 

மேற்குறிப்பிட்ட படங்களுக்கு பிறகு நடிகர் தனுஷ் கார்த்திக் நரேன் இயக்கத்தில் க்ரைம் த்ரில்லர் சார்ந்த ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

 

Exit mobile version