Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

20 வயதில் தயாரிப்பாளர் ஒருவர் அட்ஜெஸ்ட்மென்ட்க்கு அழைத்தார்! விடாமுயற்சி திரைப்பட நடிகை பேட்டி!!

#image_title

20 வயதில் தயாரிப்பாளர் ஒருவர் அட்ஜெஸ்ட்மென்ட்க்கு அழைத்தார்! விடாமுயற்சி திரைப்பட நடிகை பேட்டி!!

20 வயதில் தயாரிப்பாளர் ஒருவர் அட்ஜெஸ்ட்மென்ட்க்கு அழைத்தார் என்று விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வரும் பிரபல நடிகை ரெஜினா கேசான்ட்ரா அவர்கள் அதிர்ச்சியான விஷயத்தை கூறியுள்ளார்.

நடிகர் பிரசன்னா நடிப்பில் 2005ம் ஆண்டு வெளியான கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் ரெஜினா கேசான்ட்ரா அவர்கள் நடிகையாக அறிமுகமானார். அதன். பின்னர் அழகிய அசுரா திரைப்படத்தில் நடித்தார்.

அதன் பின்னர் கன்னடா, தெலுங்கு மொழிகளில் நடித்த நடிகை ரெஜினா அவர்கள் 8 வருடங்கள் கழிந்து நடிகர்கள் விமல், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தின் மூலமாக மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுத்தார்.

அதன் பின்னர் ராஜ தந்திரம், சரவணன் இருக்க பயமேன், சிலுக்குவார்பட்டி சிங்கம், மாநகரம், கருங்காப்பியம், கசட தபற, சக்ரா போன்ற பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் பல தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகை ரெஜினா தற்பொழுது இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் நடிகை ரெஜினா சமீபத்திய பேட்டி ஒன்றில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதத்தில் ஒரு விஷயத்தை கூறி இருக்கின்றார்.

நடிகை ரெஜினா அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் ஆரம்பகாலத்தில் சினிமா துறையில் சந்தித்த சவால்களை பற்றி கூறினார். அப்பொழுது நடிகை ரெஜினா அவர்கள் “நான் ஒரு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு சென்றிருந்தேன். அப்பொழுது அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் என்னை அட்ஜெஸ்ட்மென்ட்க்கு அழைத்தார். அப்பொழுது எனக்கு 20 வயது தான் இருக்கும். எனக்கு அப்பொழுது அதைப் பற்றி புரியவில்லை. ஆனால் அதுதான் முதல் முறை” என்று ஓபனாக கூறியுள்ளார்.

Exit mobile version