திருமணத்தன்று வீபரீதம்! மணப்பெண் தற்கொலை! காரணம் என்ன?

0
132

சென்னையில் திருமணம் நடைபெற இருந்த நாளன்று மணப்பெண் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை முகப்பேறு  பகுதியை அடுத்த காளமேகம் சாலை அருகே வசித்து வருபவர்  ரவி என்பவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவி நான்கு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்ட நிலையில், தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார் ரவி.

இந்நிலையில் திண்டிவனம் பகுதியை சேர்ந்த ரவியின் அக்கா மல்லிகா என்பவரது மகள் திவ்யா என்பவர் நர்சாக பணியாற்றி வருகிறார். கடந்த 3 மாதமாக தாய் மாமனாகிய ரவி வீட்டில் தங்கி, அங்கிருந்து தான் வேலை செய்யும் மருத்துவமனைக்குச் சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில் குழந்தைகளுடன் தனியாக கஷ்டப்படும் ரவிக்கு திவ்யாவை கல்யாணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். வெள்ளிக்கிழமையான இன்று இவர்களது திருமணம் ரவி வீட்டில் வைத்து எளிமையாக நடைபெற இருந்தது. மணமகனான ரவி மணக்கோலத்தில் தாயாராக, திவ்யா அவரது அறையை விட்டு வெளியே வராமலிருந்தார்.

இதனால் சந்தேகமடைந்த ரவி கதவை தட்ட திவ்யாவிடம் இருந்து பதில் வராததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்கையில் , திவ்யா தூக்கில் தொங்கியபடி கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்று ரவி சேர்க்கையில்,

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட அங்கு சென்ற போலீஸ் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள பிடிக்காமல் அவர் தற்கொலை செய்துகொண்டாரா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.