அடேங்கப்பா!! இந்த உண்மை மட்டும் தெரிந்தால் வெற்றிலையை ஒரு நாளும் ஒதுக்க மாட்டீர்கள்!!

0
286
#image_title

அடேங்கப்பா!! இந்த உண்மை மட்டும் தெரிந்தால் வெற்றிலையை ஒரு நாளும் ஒதுக்க மாட்டீர்கள்!!

வெற்றிலையில் உள்ள மருத்துவ குணங்களைப் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

வீட்டில் வெற்றிலை செடி வளர்த்தால் மிகவும் நல்லது எந்த ஒரு கெட்ட சக்தியும் வீட்டை நெருங்காது என்று கூறுவார்கள்.

கடன் பிரச்சனை குறைவதற்கும் வீட்டில் பணம் சேர்வதற்கும் வெற்றிலை செடியை வளர்த்தாலே போதும்.

இதில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன.

வெற்றிலையை நன்றாக மென்று சாப்பிடுவதால் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

மேலும் இதில் இருக்கக்கூடிய ஆன்ட்டி ஆக்சிடென்ட் நமக்கு முதுமை தோற்றத்தை வரவிடாமல் தடுக்கும்.

தொண்டை வலி, தொண்டை கரகரப்பு பிரச்சனை உள்ளவர்கள் இந்த வெற்றிலையை அரைத்து சாறாக எடுத்துக் குடித்தால் மிகவும் நல்லது.

இதில் விட்டமின் ஏ விட்டமின் சி மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது.
சுவாசப் பிரச்சனையில் இருப்பவர்கள் இந்த வெற்றிலையில் சிறிதளவு நல்லெண்ணெய் தேய்த்து தோசை கல்லில் சிறிது நேரம் சூடுபடுத்தி நெஞ்சின் மீது வைத்து வர சுவாசப் பிரச்சனை நீங்கும்.

குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் மார்பக வலியால் தவிக்கும்போது இந்த வெற்றிலையில் சிறிதளவு விளக்கெண்ணெய் தடவி தோசை கல்லில் சூடு படுத்தி மார்பகத்தின் மீது வைத்து வர வலி நீங்கும்.

வெற்றிலை இலையை கஷாயம் செய்து தினமும் குடித்து வர இதயம் நன்கு பலம் பெறும்.

நுரையீரலில் உள்ள கபம் குறையும்.
இந்த வெற்றிலைச் சாறை பாலில் கலந்து குடித்து வர மனதில் உள்ள பதட்டங்கள் நீங்கும்.

வெற்றிலையை நன்றாக மென்று சாப்பிட்டு வர கண் பார்வை நன்றாக தெரியும்.

வெற்றிலை சாப்பிடும் போது அதன் காம்பை நீக்க வேண்டும்.
உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் ஒரு வெற்றிலையில் 5 லிருந்து 6 மிளகை சேர்த்து மென்று சாப்பிட்டால் உடல் எடை குறையும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் சளி இருமல் பிரச்சனைக்கு வெற்றிலை சாப்பிடுவது மிகவும் நல்லது.

வெற்றிலை மற்றும் துளசி சாறுடன் சிறிதளவு மிளகை சேர்த்து சாப்பிட்டு வர சளி இருமல் நீங்கும்.

வாயில் ஏற்படும் துர்நாற்றத்தையும் வெற்றிலை இலை போக்கும்.

முழங்கால் மற்றும் மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் இந்த வெற்றிலையை சிறிதளவு தோசை கல்லில் சூடு படுத்தி வலி இருக்கும் இடத்தில் வைத்து வர உடனடியாக நீங்கும்.

தலைமுடி கருமையாக, நீளமாக, பொடுகு பிரச்சனை இல்லாமல் இருக்க இந்த வெற்றிலையை அரைத்து ஹேர் பேக் போன்று செய்து ஒரு மணி நேரம் கழித்து தலைக்கு குளித்து வர இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
வெற்றிலை ஆண்களின் விந்தணு சக்தியை அதிகப்படுத்துகிறது.