Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அடேங்கப்பா! உலர்திராட்சையில் இத்தனை நன்மைகளா? பல்வேறு நோய்களுக்கு அருமருந்து!

அடேங்கப்பா! உலர்திராட்சையில் இத்தனை நன்மைகளா? பல்வேறு நோய்களுக்கு அருமருந்து! 

திராட்சை பழங்களை வேகவைத்து வெயிலில் உலர வைத்து கிடைப்பதுதான் உலர் திராட்சை. இதை கிஸ்மிஸ் பழம் என்று கூட கூறுவார்கள். கருப்பு, பச்சை, பழுப்பு, என மூன்று வண்ணங்களில் நமக்கு கிடைக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். பச்சையாக திராட்சை சாப்பிடுவதை விட இதுபோல் உலர் திராட்சையாக செய்து சாப்பிடுவதால் 10 மடங்கு சத்துக்கள் கிடைக்கின்றன.

இந்த உலர் திராட்சையில் விட்டமின் சி, பி, மற்றும் போலிக் ஆசிட், இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம்,மெக்னீசியம், ஆகிய சத்துக்கள் உள்ளன. இத்தனை சத்துக்களை உள்ளடக்கிய உலர் திராட்சை நமது உடலில் ஏற்படும் சில சவலான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.

தினமும் காய்ந்த திராட்சைகளை பயன்படுத்துவதாக இருந்தால் 10 முதல் 15 பயன்படுத்தலாம். இதை சிறிது நீரில் கழுவி விட்டு தான் பிறகு பயன்படுத்த வேண்டும்.

1. கொலஸ்ட்ரால் பிரச்சினை உள்ளவர்கள் காலை, மதியம் மற்றும் இரவு உணவிற்குப்பின் காய்ந்த திராட்சையை சாப்பிட்டு வர கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும்.

2. எலும்பு சம்பந்தமான பிரச்சனை வராமல் தடுக்க வேண்டும் என்றால் இந்த உலர் திராட்சை தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் அதிக அளவு உள்ள கால்சியம் எலும்புகளுக்கு ஆரோக்கியத்தையும், அடர்த்தியையும், வலிமையையும் கொடுக்கும்.

3. மூட்டு வலி, மூட்டு தேய்மானம், மூட்டு பிரச்சனைகள் வராமல் இருக்க இந்த உலர் திராட்சை  உதவுகிறது.

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 250மிலி தண்ணீர் விடவும். ஒரு 15 திராட்சைகளை போட்டு நன்றாக கொதிக்க விடவும். திராட்சை வந்ததும் இறக்கி அந்த தண்ணீரை குடித்து விட்டு திராட்சையை சாப்பிடலாம். இதனால் பலவித நன்மைகள் கிடைக்கும். இதில் கிடைக்கும் நன்மைகளாவன:

*. சிலருக்கு உடல் சூடு எப்போதும் இருந்து கொண்டே இருக்கும் அவர்கள் இதே போல் காய்ந்த திராட்சையை கொதிக்க வைத்து வெறும் வயிற்றில் குடித்து வர உடலின் வெப்பநிலை சமபடும்.

*. மாதவிடாயின் போது அதிக ரத்தப்போக்கு ஏற்படும் பெண்கள் சாப்பிடுவதால் ரத்த போக்கின் அளவை குறைக்கும். மேலும் வயிற்று வலியையும், உடல் சோர்வையும் குறைக்கும். ஒழுங்கற்ற மாதவிடாயை சரி செய்யும்.

*. சிறுநீர் கடுப்பை குறைக்கும்.

*.  சில பேருக்கு அல்சர் எனப்படும் வயிற்றுப்புண் இருக்கும். அவர்கள் இந்த நீரையும் திராட்சையும் சாப்பிட்டு வர புண்களை படிப்படியாக ஆற்றும்.

*. ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் இதனை சாப்பிட்டு வர ரத்த அழுத்தம் சீராகும். மேலும் இது வெள்ளை ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

உலர் திராட்சையை முதல் நாள் இரவு ஊற வைத்து அடுத்த நாள் ஊறவைத்து தண்ணீருடன் சேர்த்து சாப்பிட்டு வர நமது உடலில் ஏற்படும் அமிலத்தன்மை பாதிப்பு மற்றும் சிறுநீரக தொற்று ஆகியவற்றை போக்கும்.

 

 

Exit mobile version