Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அடேங்கப்பா! வெளியான ஒரு நாளிலேயே இவ்வளவு பெரிய சாதனையா? துணிவு மாஸ் அப்டேட்! 

அடேங்கப்பா! வெளியான ஒரு நாளிலேயே இவ்வளவு பெரிய சாதனையா? துணிவு மாஸ் அப்டேட்!

தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து ஹெச். வினோத் இயக்கத்தில் தல அஜித் குமார் நடித்த படம் தான் துணிவு. அஜித்துடன் இந்த படத்தில் மஞ்சு வாரியர் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்லதொரு வரவேற்பை பெற்றுள்ளது. ஆண்டின் முதல் பிளாக் பாஸ்டர் படமாக இது அமையும் என்பதோடு வசூலிலும் பெரிய சாதனையை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை அடுத்து வெளிநாட்டில் வட அமெரிக்காவில் இந்த படம் பிரீமியர் 207 இடங்களில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் மட்டுமே அமெரிக்க மதிப்பில் $229,051  வரை வசூல் செய்து பெரிய சாதனையை படைத்துள்ளது. மேலும் இந்தப் படம் மட்டுமே ப்ரீமியரில் அதிக வசூல் செய்த அஜித்தின் முதல் படம் என்ற புதிய சாதனையை படைத்துள்ளது. கூடிய விரைவில் இந்த படம் $250K வரை வசூல் செய்து சாதனையில் புதிய மைல்கல்லை எட்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version