திருப்பு முனையாக அமையுமா குருதி ஆட்டம்? நம்பிக்கையோடு காத்திருக்கும் அதர்வா!

0
180

திருப்பு முனையாக அமையுமா குருதி ஆட்டம்? நம்பிக்கையோடு காத்திருக்கும் அதர்வா!

நடிகர் அதர்வா நடித்துள்ள குருதி ஆட்டம் திரைப்படம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மறைந்த முரளியின் மூத்த மகன் அதர்வா பாணா காத்தாடி திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். பாலா இயக்கத்தில் அவர் நடித்த பரதேசி திரைப்படம் அவருக்கு பரவலான கவனத்தைப் பெற்று தந்தது. அதன் பின்னர் அவரால் பெரிய அளவில் ஹிட்படங்கள் கொடுக்க முடியவில்லை. தனக்கான இடத்துக்காக அவர் போராடிக் கொண்டு இருக்கிறார்.

இந்நிலையில் 8 தோட்டாக்கள் என்ற வெற்றிப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இளம் இயக்குனர் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் அவர் நடித்துள்ள திரைப்படம் குருதி ஆட்டம் 5 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்த நிலையில் தற்போது ரிலீஸ் ஆக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி நல்ல கவனத்தைப் பெற்றுள்ளது. மதுரை பின்னணியில் ஆக்‌ஷன் கதைக்களமாக உருவாகியிருக்கும் படமாக குருதி ஆட்டம் உருவாகியுள்ளது.

இந்நிலையில் ஹிட் படம் கொடுத்து நீண்ட நாட்கள் ஆகியுள்ள நிலையில் அதர்வா குருதி ஆட்டம் திரைப்படத்தை பெரிய அளவில் நம்பிக் கொண்டு இருக்கிறாராம். இந்த படத்தை சமீபத்தில் தனது குடும்பத்துடன் பார்த்துள்ளாராம். அவர்கள் அனைவரும் படத்துக்கு நேர்மறையான விமர்சனங்களைக் கொடுக்க, இப்போது உற்சாகத்தோடு வளைய வருகிறாராம்.