ஆத்தூரை மாவட்டமாக மாற்ற வேண்டும்! பட்ஜெட் தாக்குதலில்  எம்.எல்.ஏ ஜெய்சங்கர் மனு! 

0
186
Athur should be turned into a district! MLA Jaisankar petitions in budget attack!

ஆத்தூரை மாவட்டமாக மாற்ற வேண்டும்! பட்ஜெட் தாக்குதலில்  எம்.எல்.ஏ ஜெய்சங்கர் மனு!

நடைபெற்றது இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கரன் கலந்து கொண்டார்.ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கூட்டம் நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் மொத்தம் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கரன் கலந்துகொண்டார்.அப்பொழுது அவர் பேசியபோது இந்த கூட்டத்தில் ஆத்தூர் தலைமை இடமாக கொண்டு மாவட்டமாக அறிவிக்க ஒரு தீர்மானம் வைக்க வேண்டும் என்றும் வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆத்தூர் மாவட்டம் ஆகவேண்டும் என்று சட்டமன்றத்தில் மனு அளிக்கப்படும் என்றும் கூறினார்.அதுமட்டுமில்லாமல் ஒன்றிய கவுன்சிலர்கள் அனைவரும் என்னுடன் எப்போதும் பேசலாம்.

அவர்களுக்கு தேவையான நிதியை ஒதுக்கி தருவேன் என்றும் அதே போல உங்களிடம் உள்ள குறைகளை என்னிடம் சொன்னாள் நான் நிவர்த்தி செய்து தரப்படும் என்றும் கூறினார்.இதனை அடுத்து ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் செந்தில் பேசியது.எங்கள் ஊராட்சியில் இன்று காலை திட்டப்பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் மூலமாக செய்யப்பட்டது. ஆனால் எங்களுக்கு எந்த ஒரு அழைப்பும் இல்லை என்று கூறினார்.அதேபோல ஒன்றிய தலைவர் எங்களுக்கும் நீங்கள் அழைக்க வேண்டும் என்று கூறினார். இதற்கு கிராம ஊராட்சி ஆணையாளர் வெங்கட்ரமணன் இனிமேல் எந்த ஒரு ஊராட்சிகளிலும் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்ட அந்தந்த ஒன்றிய கவுன்சிலர்கள் ஒன்றிய தலைவர் அழைக்கப்படும் என்று உறுதியளித்தார்.

இதன் பின்பு மல்லியகரை ஒன்றிய கவுன்சிலர் ரவி பேசியபோது இந்த கூட்ட அரங்கத்தில் கலைஞர் ஸ்டாலின் படம் வைத்தது போல் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா படத்தை வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.இதற்கு பதிலளித்த வட்டார வளர்ச்சி ஆணையாளர் ராஜேந்திரன் உடனயடியாக படம் வைக்கப்படும் என்று உறுதி அளித்தார்.அதன் பின்பு கூட்டம் ஒருமனதாக முடிக்கப்பட்டது.இந்த கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் நல்லம்மாள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் வேளாண் அதிகாரிகள் தோட்டக்கலை துறை அதிகாரிகள் மருத்துவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.