Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அட்லி இயக்கும் ஷாருக் கான் படம் விஜய்காந்த் பட காப்பியா?… புகாரளித்த தயாரிப்பாளர்!

அட்லி இயக்கும் ஷாருக் கான் படம் விஜய்காந்த் பட காப்பியா?… புகாரளித்த தயாரிப்பாளர்!

அட்லி இப்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

ராஜா ராணி என்ற திரைப்படதின் மூலமாக இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் அட்லி. அந்த படம் மிகப்பெரிய ஹிட்டானதை தொடர்ந்து அட்லீக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. கதை காப்பியடிக்கப்பட்டதாக கூறப்பட்டபோதும் நிலையிலும் படத்திற்கான வரவேற்பு குறையவில்லை.

இவரின் ராஜா ராணி திரைப்படம் மௌன ராகம் படத்தின் காப்பி என்றும், தெறி திரைப்படம் விஜயகாந்தின் சத்ரியன் படத்தின் காப்பி என்றும், மெர்சல் அபூர்வ சகோதரர்கள் படத்தின் தழுவல் என்றும், பிகில் இந்தியில் வெளியான சக் தே இந்தியா படத்தின் காப்பி என்றும் சொல்லப்பட்டது. இது சார்பாக அட்லி மீது விமர்சனங்களும் ட்ரோல்களும் உருவாகின.

ஆனாலும் இந்த படங்கள் எலலாம் வெற்றி என்பதால், இப்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானை இயக்கி வருகிறார். இந்நிலையில் இந்த படமும் தமிழில் விஜய்காந்த் நடிப்பில் பல ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான பேரரசு என்ற படத்தின் காப்பிதான் என்று சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக பேரரசு படத்தின் தயாரிப்பாளர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஜவான் படத்துக்கு சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

ஜவான் படத்தில் நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோரும் நடிக்க அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்துவரும் நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் முழுவதும் சென்னையில் இதன் ஷூட்டிங் நடைபெற்றது.

Exit mobile version