Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நான்காவது முறையாக இணையும் வெற்றி கூட்டணி! உறுதி செய்த அட்லீ

நான்காவது முறையாக இணையும் வெற்றி கூட்டணி! உறுதி செய்த அட்லீ

இயக்குனர் ஷங்கரிடம், நண்பன் மற்றும் எந்திரன் ஆகிய இரு படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் அட்லீ. இவர் திரைப்படம் இயக்குவதற்கு முன்பே நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் “முகப்புத்தகம்” என்னும் குறும்படத்தை இயக்கியுள்ளார் . 

சினிமாவில் தற்போது டாப் ஹீரோக்கள் அனைவரும் இளம் இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்து வருகிறார்கள். அதுபோல மாஸ் ஹீரோக்கல் இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறார்கள்.

இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் விக்ரம். இப்படத்தில் டாப் ஹீரோவான உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து இயக்கி வருகிறார். அந்த வகையில் ராஜா ராணி என்ற ஒரு படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் தனது வெற்றியை பதித்தார் இயக்குனர் அட்லீ.

தனது முதல் வெற்றியை சுவைத்த அட்லீ. அதே உத்வேகத்துடன் நடிகர் விஜயை வைத்து தெறி என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கினார் அட்லீ. தெறி படத்தின் மூலம் விஜய்யை அவரது கரியரில் அடுத்த இடத்திற்கு கொண்டு சென்றார்.

விஜய் ரசிகர்கள் எதிர்பார்க்கும் மாஸ் சீன்ஸ், லவ், ஆக்சன், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த கலவையாக தெறி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இப்படமும் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது.

பிறகு மெர்சல் என்ற படத்தையும் விஜய்யை வைத்து இயக்கி இருந்தார்.ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் தளபதிக்கு
இளைய தளபதியாக இருந்த விஜய் தளபதி விஜய் ஆனது மெர்சல் படத்திற்கு பிறகு தான்.

அதன் பிறகு மூன்றாவது முறையாக விஜய்யை வைத்து பிகில் என்ற படத்தை இயக்கினார்.ராயப்பன் கதாபாத்திரம் அனைத்து விதமான ரசிகர்களையும் கவர்ந்தது.

இந்நிலையில் அமேசான் பிரைம் நிறுவனம் ட்விட்டரில் “ராயப்பன் கதாபாத்திரத்தை மட்டும் வைத்து முழு படம் எடுத்தால் எப்படி இருக்கும்” என்று கேள்வி எழுப்பி இருந்தது.

இதற்கு பதில் அளித்த அட்லீ, ராயப்பன் கதாபாத்திரம் பேசும் “செஞ்சுட்டா போச்சு” என்ற வசனத்தை பதிவிட்டு இருந்தார். இந்த நிகழ்வு ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

Exit mobile version