வளிமண்டல மேலடுக்கு சுழற்சி! அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

0
142

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. ஆகவே வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுவையில் கடலோர மாவட்டங்களில் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்புண்டு.

அதிகபட்சமாக 22 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் எனவும் நேற்று காலை நிலவரப்படி 24 மணி நேரத்தில் மாநிலத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல், மற்றும் ராசிபுரத்தில் 2 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

ஆந்திராவையொட்டியுள்ள கடலோர பகுதிகள், அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல், உள்ளிட்ட பகுதிகளில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் ஆகவே வரும் 5ம் தேதி வரையில் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கும் மீன்ப்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.