ATM இன் புதிய விதி!! இனி பணம் எடுக்க 30 செகண்ட் மட்டுமே!!

0
139

இந்திய ரிசர்வ் வங்கி ஏடிஎம் மெஷின்களில் ஏற்படும் திருட்டு மற்றும் மோசடிகளை தடுக்கும் வகையில் ஏடிஎம் விதிகள் குறித்த சில மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.

 

2018 ஆம் ஆண்டில் ATM விதிகள் திருத்தப்பட்டன, பல முறை திருத்தங்களுக்கு பிறகு, இப்போது டிசம்பர் 2024 இல் புதிய விதியுடன் சில மாற்றங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.ஏடிஎம்-லிருந்து பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அடுக்கை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட புதிய விதி பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது.

 

ATM விதியின் புதிய மாற்றங்கள் :-

 

ATM மையங்களில் இருந்து பணம் எடுக்கும் ATM கார்டு பயனர்கள் 30 வினாடிகளுக்குள் பணத்தை எடுக்கத் தவறினால், பணம் தானாகவே ஏடிஎம் மூலம் மீண்டும் எடுத்துக்கொள்ளப்படும். இதன் பின்னர், மீண்டும் எடுக்கப்பட்ட தொகை வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் மீண்டும் வரவு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஏடிஎம் மையங்களில் இருந்து சில நேரங்களில் பணம் எடுக்கப்படாமல் இருக்கும் போது, அது திருட்டு அல்லது மோசடி இழப்பு அபாயத்தை சந்திக்க நேரிடுகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்களின் நிதியை மிகவும் திறமையாகப் பாதுகாக்கிறது. ஆர்பிஐயால் புதுப்பிக்கப்பட்ட இந்த விதிமுறை, ஏடிஎம் மோசடி சம்பவங்களை கணிசமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஒரு வாடிக்கையாளர் குறிப்பிட்ட நேரத்திற்குள் பணத்தை ATM இயந்திரத்தில் இருந்து எடுக்கவில்லை என்றால், இனி பணம் தானாகவே மீண்டும் ATM இயந்திற்குள் சென்றுவிடும் படி இயந்திரங்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.