Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாத பூஜை என்ற பெயரில் பள்ளிகளில் கொடுமைகள் நடக்கிறது!! மாவட்டக் கல்வி அலுவலர் சுற்றறிக்கை!!

பல தனியார் பள்ளிகளில் தேர்வுக்கு முந்தைய வழிமுறைகளாக சில சடங்குகள் பின்பற்றப்படுகின்றன. அவற்றில் மிகவும் முக்கியமானது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் செய்யக்கூடிய பாத பூஜை.

இனி தனியார் பள்ளிகளில் பாத பூஜை கடைப்பிடிக்கப்படக்கூடாது என மாவட்ட கல்வி அலுவலர் சுற்றறிக்கை ஒன்றினை வெளியிட்டார். அதில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது :-

தேர்வுக்கு முன் மாணவர்கள் பின்பற்றப்படக்கூடிய இந்த பாத பூஜை தொடர்பாக பல சர்ச்சை கருத்துக்கள் எழுந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், பாத பூஜை தொடர்பாக பல புகார்கள் மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு வந்ததன் பேரில் இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்படுகிறது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

தேர்வுக்கு முன் பாத பூஜை என்ற பெயரில் நடைபெறும் கொடுமைகளை இனி தடுக்க வேண்டும் என்றும் மேலும் இது போன்ற புகார்கள் வந்தது என்றால் அந்த பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த சிற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாவட்ட கல்வி அலுவலரின் இந்த சுற்றறிக்கையால் பல்வேறு தனியார் பள்ளிகள் சங்கடத்திலும் பயத்திலும் உள்ளனர்.

Exit mobile version